எது நடந்து விடக் கூடாது என்று மக்கள் அஞ்சினார்களோ...! - ராமதாஸ் ட்வீட்

ராமதாஸ் கண்டனம்

அம்மா உணவகம் மீது திமுகவினர் நடத்திய தாக்குதல் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

 • Share this:
  சென்னை முகப்பேர் கிழக்கு ஜேஜே நகர் பகுதியில் திமுகவினர் மதுரவாயல் தொகுதியில் வெற்றி பெற்றதற்காக நன்றி தெரிவித்து அவ்வழியாக சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த அம்மா உணவகத்தில் இருந்த பெயர் பலகை வெளியே எடுத்து வந்து சாலையில் வீசி எரிந்துள்ளனர்.

  மேலும் அம்மா உணவகத்தில் நுழைந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி, அம்மா உணவகம் என்ற பெயர்ப்பலகை தொங்க விடக்கூடாது என அங்கிருந்த ஊழியர்களை எச்சரித்து சென்று உள்ளனர். அம்மா உணவகம் மீது தாக்குதல் நடத்திய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.

  அம்மா உணவகம் மீது தாக்குல் நடைபெற்ற சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் பலர் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். பாமக நிறுவனர் ராமதாஸ் இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்தில், சென்னை முகப்பேரில் உள்ள அம்மா உணவகத்தின் பெயர்ப்பலகை, அங்கு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படம் ஆகியவற்றை திமுகவினர் சூறையாடியிருப்பது கண்டிக்கத்தக்கது. அதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்!  ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து ஆள்பவர்களின் நிலைப்பாட்டுக்கு ஏற்ப கொள்கை மாற்றங்கள் செய்யப்படுவது இயற்கையே. ஆனால், எது நடந்து விடக் கூடாது என்று மக்கள் அஞ்சினார்களோ அத்தகைய செயல்களில் திமுகவினர் ஈடுபடுவதை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்! என்று தெரிவித்துள்ளார்.

  Also Read : சென்னையில் அம்மா உணவகத்தை சூறையாடிய திமுகவினர் - பரபரப்பு காட்சிகள்

  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்  தனது ட்விட்டரில், ”ஏழை எளிய மக்களின் பசியை போக்கிய அம்மா உணவகம் இன்று சில சமூக விரோதிகளால் சேதப் படுத்தப்பட்டது மிகுந்த கண்டனத்திற்குரியது..மழை வெள்ள காலம்,கொரோனா கால ஊரடங்கின் போதும் அனைத்து மக்களுக்கும் உணவளித்த அம்மா உணவகத்தை சூரையாடிய சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்” என்றுள்ளார்.
  Published by:Vijay R
  First published: