ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ரூ.259 கோடிக்கு மது விற்பனை சாதனையல்ல... வேதனை: ராமதாஸ் கருத்து

ரூ.259 கோடிக்கு மது விற்பனை சாதனையல்ல... வேதனை: ராமதாஸ் கருத்து

டாஸ்மாக் விற்பனை

டாஸ்மாக் விற்பனை

இரு நாட்களில் மதுவுக்காக செலவிடப்பட்ட சுமார் ரூ.600 கோடி ஆக்கப்பூர்வமாக செலவிடப்பட்டிருந்தால், லட்சக்கணக்கான ஏழைக் குடும்பங்களின் குழந்தைகளுக்கு புத்தாடைகளும், இனிப்புகளும் கிடைத்திருக்கும் - ராமதாஸ்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை ஒட்டி கடந்த இரு தினங்களில் ரூ.464 கோடி அளவுக்கு மது விற்பனை நடைபெற்றுள்ள நிலையில், இது குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகையை கடந்த இரண்டு நாட்களில் சுமார் 464 கோடி ரூபாய்க்கு டாஸ்மாக்கில் மது விற்பனை நடைபெற்றுள்ளது. அதிகபட்சமாக மதுரையில் 100 கோடியை மது விற்பனை தாண்டியுள்ளது. இது தொடர்பாக  பாமக நிறுவனர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதில், தமிழ்நாட்டில் தீப ஒளி திருநாளுக்கு முந்தைய நாளான நேற்று ஒரே நாளில் ரூ. 259 கோடிக்கு மது விற்பனையாகியிருக்கிறது. தீப ஒளி நாளான இன்று ரூ.300 கோடிக்கும் கூடுதலாக மது விற்பனை செய்யப்படக்கூடும் என்று டாஸ்மாக் தொழிற்சங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    கடந்த ஆண்டு தீபஒளி திருநாளுக்கு முதல் நாளில் ரூ.205 கோடிக்கும், தீப ஒளி நாளில் ரூ. 225 கோடிக்கும் மது விற்பனையான நிலையில், அதை விட இந்த ஆண்டு அதிகமாக மது விற்பனையாகியிருக்கிறது. மது விற்பனை அதிகரித்திருப்பது எந்த வகையிலும் சாதனையல்ல.... அவமானம்!

    இரு நாட்களில் மதுவுக்காக செலவிடப்பட்ட சுமார் ரூ.600 கோடி ஆக்கப்பூர்வமாக செலவிடப்பட்டிருந்தால், லட்சக்கணக்கான ஏழைக் குடும்பங்களின் குழந்தைகளுக்கு புத்தாடைகளும், இனிப்புகளும் கிடைத்திருக்கும். லட்சக்கணக்கான குடும்பங்களின் மகிழ்ச்சியை மது பறித்திருப்பது வேதனையானது!

    தீப ஒளி, பொங்கல் போன்ற திருவிழாக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட வேண்டுமானால் அந்த காலத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும். அடுத்தக்கட்டமாக தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகளை நிரந்தரமாக மூடி மது விலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்.

    Published by:Murugesh M
    First published:

    Tags: Ramadoss, Tasmac