முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஏழைக் குடும்பங்களுக்கு மாதம் ரூ.2,000... பொது நிழல் நிதிநிலை அறிக்கை வெளியிட்ட பாமக!

ஏழைக் குடும்பங்களுக்கு மாதம் ரூ.2,000... பொது நிழல் நிதிநிலை அறிக்கை வெளியிட்ட பாமக!

மாதிரி படம்

மாதிரி படம்

pmk shadow financial statement | தமிழகத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் பாமக பொது நிழல் நிதி அறிக்கையை வெளியிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழக நிதிநிலை அறிக்கை வரும் 20ஆம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையின் முன்பு பாமக சார்பாக பொது நிழல் நிதி நிலை அறிக்கை வெளியிடப்படும். இந்நிலையில், இன்று பாமக சார்பில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

அதில்,

ஏழைக் குடும்பங்களுக்கு மாதம் ரூ.2,000 வழங்கப்படும்.
வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் குடும்பங்களுக்கு அடிப்படை வருமானமாக மாதம் ரூ.2,000 வழங்கும் திட்டம் வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் செயல்படுத்தப்படும்.
ஏழைக் குடும்பங்களுக்கு மாதம் ரூ.2,000 உதவி வழங்கப்பட்டாலும், அக்குடும்பங்களுக்கு அரசால் வழங்கப்படும் பிற சமூகப் பாதுகாப்பு திட்ட உதவிகளும் தொடர்ந்து வழங்கப்படும்.
முதியோர், ஆதரவற்றோருக்கு எந்தவித நிபந்தனையும் இல்லாமல் மாதம் ரூ.1,500 நிதியுதவி வழங்கப்படும். 20 லட்சம் பேருக்கு இந்த நிதியுதவி வழங்க ரூ.3,600 கோடி ஒதுக்கப்படும்.
வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ.5,000 உதவித் தொகை வழங்கப்படும்.
படித்துவிட்டு 5 ஆண்டுகளுக்கும் மேலாக வேலையில்லாமல் தவிக்கும் இளைஞர்களுக்கு உதவும் வகையில், அவர்களுக்கான உதவித்தொகை உயர்த்தப்படுகிறது.
அதன்படி, மாதம் ரூ.5,000 வரை உதவித்தொகை வழங்க அரசு தீர்மானித்துள்ளது.
அதன் விவரம் வருமாறு :- பத்தாம் வகுப்பில் தோல்வி - ரூ.1,000, பத்தாம் வகுப்பில் தேர்ச்சி - ரூ.2,000, 12ஆம் வகுப்பு தேர்ச்சி - ரூ.3,000, பட்டப்படிப்பு முடித்தவர்கள் - ரூ.4,000, பட்டமேற்படிப்பு முடித்தவர்கள் - ரூ.5,000.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒரு பதவி உயர்வு கிடைப்பது உறுதி செய்யப்படும்.
First published:

Tags: Tamil Nadu, TN Budget 2023