• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • PMK Protest : டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி பீரை தரையில் ஊற்றி பாமகவினர் ஆர்ப்பாட்டம்

PMK Protest : டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி பீரை தரையில் ஊற்றி பாமகவினர் ஆர்ப்பாட்டம்

பீரை தரையில் ஊற்றி ஆர்ப்பாட்டம்

பீரை தரையில் ஊற்றி ஆர்ப்பாட்டம்

இத்தனை நாள் அமைதியாக இருந்து போல இன்னும் 15 நாள் அமைதியாக இருந்திருக்கலாம் ஆனால் யாருடைய அறிவுறுத்தலையும் கேட்காமல் மதுக்கடைகளை திறந்திருக்கின்றனர்.

  • Share this:
    கொரோனா ஊரடங்கு சமயத்தில் மதுக்கடைகளை திறந்திருப்பதை கண்டித்தும், டாஸ்மாக் மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் பாமக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    கொரானா வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. அத்தியாவசிய கடைகள் அனைத்தும் திறந்த நிலையில், கடந்த 14ஆம் தேதி திங்கட்கிழமை முதல் 27 மாவட்டங்களில் தமிழக அரசின் டாஸ்மாக் மதுபான கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், டாஸ்மாக் மதுபான கடைகள் திறப்பதினால் நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதாகவும் எனவே உடனடியாக டாஸ்மாக் மதுபான கடைகளை தமிழக அரசு மூட வலியுறுத்தியும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக மாவட்ட செயலாளர் ரவி தலைமையில் குடியாத்தம் சித்துர்கேட் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    அப்பொழுது மதுக்கடைகளை மூட வலியுறுத்தியும் மதுக்கடைகளை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. மேலும், மது வகைகளை சாலையில் கொட்டியும் மதுபாட்டில்களை சாலையில் உடைத்தும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு சித்தூர் கேட் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில், மதுக்கடைகளை மூட வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினரும் பாமக இளைஞரணி தலைவருமான அன்புமணி ராமதாஸ் தி.நகரில் உள்ள வீட்டு வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டார். இதேபோல, சென்னை தி.நகரில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி அலுவலகத்தின் முன்பு, பாமக இணை பொது செயலாளர் ஏ.கே.மூர்த்தி முன்னிலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சமூக இடைவெளியை பின்பற்றி 10 பேர் கலந்து கொண்டனர்.

    அப்போது மதுக்கடைகள் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பதாகைகளை ஏந்தியபடி கோஷமிட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஏ.கே. மூர்த்தி, மக்களின் பாதுகாப்பு முக்கியம் என்று அறிவுறுத்தி வரும் நிலையில் கொரோனா காலத்தில் மதுகடைகளை திறந்து உள்ளனர். இன்று ஆட்சியில் இருக்கும் இவர்கள் கடந்த ஆண்டு அதிமுக அரசு மதுக்கடைகளை திறந்த போது போராட்டம் நடத்திவிட்டு இன்று அவர்களே மதுக்கடைகளை திறந்துவிட்டிருக்கின்றனர்.

    இத்தனை நாள் அமைதியாக இருந்து போல இன்னும் 15 நாள் அமைதியாக இருந்திருக்கலாம் ஆனால் யாருடைய அறிவுறுத்தலையும் கேட்காமல் மதுக்கடைகளை திறந்திருக்கின்றனர், இதனை கண்டித்து பாமக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் அமைதியான முறையில் போராட்டம் நடந்து வருகிறது. தங்களுடைய முடிவை மறுபரீசிலனை செய்து மதுக்கடைகளை மூட வேண்டும்.

    Must Read : அரியலூரில் 10 ஹைட்ரோகார்பன் கிணறுகள்: சுற்றுச்சூழல் அனுமதி கோரி ஓஎன்ஜிசி விண்ணப்பம்

    தமிழக முதலமைச்சர் பிரதமரை சந்திப்பது மரியாதை நிமித்தமானதாக இருக்கலாம், திட்டங்கள் குறித்து பேசலாம் அப்படியான சூழலில் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய திட்டங்களை கேட்டு முறையாக பெற வேண்டும் என்று கூறினார்.

    இதற்கிடையில், கொரோனா பரவல் அதிகமாகும் என்பதால் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி புதுச்சேரி வழுதாவூர் சாலையில் பாமகவினர் கறுப்பு ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    குடியாத்தம் செய்தியாளர் - கோபிநாத்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: