ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளித்த ஆளுநர் முடிவிற்கு பாமக தலைவர் அன்புமணி வரவேற்பு

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளித்த ஆளுநர் முடிவிற்கு பாமக தலைவர் அன்புமணி வரவேற்பு

ஆளுநர் ஒப்புதலுக்கு அன்புமணி வரவேற்பு

ஆளுநர் ஒப்புதலுக்கு அன்புமணி வரவேற்பு

ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் வரவேற்கத்தக்கது. அதேபோல பேரவைக் கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்திற்கு மாற்றான சட்டத்தை நிறைவேற்றவும், அதை நீதிமன்றங்களில் பாதுகாக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான அவசர சட்டத்திற்கு தமிழ்நாடு ஆளுநர் ஒப்புதல் அளித்ததற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வரவேற்று தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

  இதுகுறித்து அவர் பதிவிட்ட ட்விட்டில், தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களை தடைச் செய்வதற்க்கான அவசர சட்டத்திற்கு தமிழ்நாடு ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வருவது தடுக்கப்படும்.

  ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டம் கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டதற்கு பிந்தைய 14 மாதங்களில் 29 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். அவை இனி தடுக்கப்படும். அந்த வகையில் ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் வரவேற்கத்தக்கது.

  இதையும் படிக்க : ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல்!

  இம்மாத இறுதியில் நடைபெற உள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்திற்கு மாற்றான சட்டத்தை நிறைவேற்றவும், அதை நீதிமன்றங்களில் பாதுகாக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

  ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்ய, சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அந்தக் குழு பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு, அரசுக்கு அறிக்கையைச் சமர்ப்பித்தது.

  இந்த அவசரச் சட்டம் வரும் 17-ம் தேதி தொடங்கும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் முழுமையான சட்ட வடிவம் பெற உள்ளது. முன்னதாக, இந்த அவசரச் சட்டம் அரசிதழிலும் வெளியிடப்பட்டது. இந்த சட்டப்படி, தமிழகத்தில் பணத்தையோ அல்லது வேறு ஏதேனும் பொருளையோ வைத்து, ஆன்லைன் மூலம் நடைபெறும் சூதாட்டங்கள் மற்றும் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.

  Published by:Raj Kumar
  First published:

  Tags: Anbumani ramadoss, Online rummy, PMK, RN Ravi