Home /News /tamil-nadu /

ஊராட்சி தலைவர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

ஊராட்சி தலைவர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

அன்புமணி இராமதாஸ்

அன்புமணி இராமதாஸ்

PMK Anbumani Ramadoss | ஜனநாயகத்தின் வேரான உள்ளாட்சிகள் வலிமையாக இருந்தால் தான் ஜனநாயகம் வலுப்பெறும். அப்போது தான் காந்தியடிகள் கண்ட கிராம சுயராஜ்யத்தை அடைய முடியும் என அன்புமணி பதிவு

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    ஊராட்சி தலைவர்களுக்கு கூடுதல் அதிகாரம் வேண்டும் என ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு இன்று போராட்டம் நடத்தியுள்ளது எனவும் அதிகாரங்களை வழங்கினால் தான் காந்தியடிகள் கண்ட கிராம சுயராஜ்யம் அடைய முடியும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் “பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும், கூடுதல் அதிகாரம் வேண்டும், 100 நாள் வேலைக்கான பணி ஆணைகளை வழங்க அதிகாரம் வேண்டும் என்பன உள்ளிட்ட 11அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சித்தலைவர்கள் கூட்டமைப்பு சென்னையில் இன்று போராட்டம் நடத்தியுள்ளது!

     



     

    Also Read : நடிகை மீரா மிதுன் விரைவில் கைது...



    ஜனநாயகத்தின் வேரான உள்ளாட்சிகள் வலிமையாக இருந்தால் தான் ஜனநாயகம் வலுப்பெறும். அப்போது தான் காந்தியடிகள் கண்ட கிராம சுயராஜ்யத்தை அடைய முடியும். இதைக் கருத்தில் கொண்டு ஊராட்சித் தலைவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும்!” என பதிவிட்டுள்ளார்.
    Published by:Raj Kumar
    First published:

    Tags: Panchayat, Pmk anbumani ramadoss, President

    அடுத்த செய்தி