ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சினிமாவுக்கு அடித்து கொள்கிறார்கள்.. இளைஞர்கள் எப்போது தான் திருந்துவார்கள் - அன்புமணி வேதனை

சினிமாவுக்கு அடித்து கொள்கிறார்கள்.. இளைஞர்கள் எப்போது தான் திருந்துவார்கள் - அன்புமணி வேதனை

அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ்

சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும் அரசு இலவசங்களுக்கு மக்கள் அடித்துக்கொள்வது தான் முன்னேற்றமா என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

நடிகர்களின் பட டிக்கெட்டுகளுக்காக தமிழ்நாட்டு இளைஞர்கள் அடித்துக்கொள்வது வேதனை அளிப்பதாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.

பாமக சார்பில் சமத்துவ பொங்கல் விழா சென்னை கொளத்தூரில் நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், கட்சியின் மூத்த தலைவர் ஜிகே மணி, ஏகே மூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர். இந்த விழாவில் அன்புமணி தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கை தரம், இளைஞர்களின் சினிமா மோகம், ஆளுநர் விவகாரம் ஆகியவை குறித்து பேசினார்.

அவர் பேசியதாவது, இந்த விழா விவசாயிகளுக்காக நடத்தப்படுகிறது. ஆனால் அந்த விவசாயிகள் நலனுடன் இல்லை. இதற்கு பதிலாக முதலாளிகள் தான் வாழ்கின்றார். நெய்வேலியில் விவசாயிகளின் விளை நிலத்தை கையகப்படுத்த பாமக ஒருபோதும் அனுமதிக்காது. சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும் அரசு இலவசங்களுக்கு மக்கள் அடித்துக்கொள்வது தான் முன்னேற்றமா.

பொங்கலுக்கு வந்துள்ள இரண்டு படங்களின் டிக்கெட்டுகளுக்காக தமிழ்நாட்டு இளைஞர்கள் அடித்துக்கொள்கிறார்கள். யார் படம் வெற்றி பெறும் என அவர்கள் அடித்துக்கொள்வது வேதனை தருகிறது. வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு சென்று வேலை வேண்டும் என்று அடித்துக்கொண்டால் பரவாயில்லை. நமது இளைஞர்கள் எப்போது தான் திருந்தப் போகிறார்கள் என்று தெரியவில்லை. இதை பார்க்கும் போது வேதனையாக உள்ளது. ஆளுநர் தமிழ்நாடு என்று கூறாமல் தமிழகம் என பெயர் மாற்றி அழைக்கிறார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு Z பிரிவு பாதுகாப்பு - X, Y, Z பிரிவு பாதுகாப்பு என்றால் என்ன ? அதன் பயன் ?

இதுபோல, ராஜஸ்தான், மாகாரஷ்டிரா மாநிலங்களின் பெயர்களை மாற்றி ஆளுநரால் அழைக்க முடியுமா. தமிழ்நாட்டு இளைஞர்களின் நலன் கருதி ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் உடனடியாக கையெழுத்து இட வேண்டும். இவ்வாறு அன்புமணி பேசினார்.

First published:

Tags: Anbumani, Anbumani ramadoss, PMK, Pmk anbumani ramadoss, Tamil movies