Home /News /tamil-nadu /

மதுவை விற்று தான் ஆட்சியை நடத்தனுமா? அன்புமணி ராமதாஸ் சாடல்!

மதுவை விற்று தான் ஆட்சியை நடத்தனுமா? அன்புமணி ராமதாஸ் சாடல்!

அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ்

காவல்துறை துறை நினைத்தால் போதைப் பொருட்களைத் தடுக்கலாம், விற்பவர்கள் யார் என காவல்துறைக்குத் தெரியும். போதைப் பொருட்களை விற்பவர்கள் மீது குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    தமிழக நிதி அமைச்சர் மீது செருப்பு வீசியது போன்ற அநாகரீகமான செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும், தமிழகத்தில் இதுபோன்று நடந்தது கிடையாது, இது தவறு என்று பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளப் பாட்டாளி மக்கள் கட்சித்தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் ஈரோட்டிற்கு வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அன்புமணி ராமதாஸ் சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் மக்களுக்கு வறுமை, மது, போதை, சூது போன்றவற்றிலிருந்து மக்களுக்கு விடுதலை கிடைக்கவில்லை என்றார்.

    நாளை சுதந்திர தினத்தில் பல அறிவிப்புகளை அறிவிக்க வேண்டும் என்றும், அதில் தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கைக் கொண்டு வரச் செயல்திட்டம், ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்கின்றோம் என்ற அறிவிப்பு, போதை பழக்கத்திற்கு எதிரான நடவடிக்கை உறுதிப்படுத்த வேண்டும் என்பனவற்றை முதல்வர் அறிவிக்க வேண்டும், இவற்றை மக்கள் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் ஆன்லைன் சூதாட்டம் தடை கொண்டு வந்த பிறகு ஒருவர் கூட தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் தடை நீக்கிய பிறகு ஓராண்டில் மட்டும் 28 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

    காவல்துறை துறை நினைத்தால் போதைப் பொருட்களைத் தடுக்கலாம். விற்பவர்கள் யார் என காவல்துறைக்குத் தெரியும். போதைப் பொருட்களை விற்பவர்களை குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். போதைப் பொருட்களைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மதுவை விற்று தான் ஆட்சியை நடத்தனுமா? இதை விட கேவலம் எதுவுமில்ல, வெட்கக்கேடு.

    2026 சட்டமன்ற தேர்தலில் பா.ம.க தலைமையில் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடிக்கும். அதற்கேற்ற யூகங்களை 2024ல் அமைப்போம் என்றார். தொடர்ந்து பேசிய அன்புமணி ராமதாஸ், தமிழக நிதி அமைச்சர் மீது செருப்பு வீசியது போன்ற அநாகரீகமான செயல்களில் ஈடுபடக்கூடாது. தமிழகத்தில் இதுபோன்று நடந்தது கிடையாது என்ற அன்புமணி ராமதாஸ், இது தவறு எனக் கூறினார்.

    ஈரோடு செய்தியாளர் : பாபு
    Published by:Raj Kumar
    First published:

    Tags: Pmk anbumani ramadoss, Tasmac

    அடுத்த செய்தி