Home /News /tamil-nadu /

தமிழகம் முழுவதும் பாமக 2.0 திட்டம்: புதிய தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி

தமிழகம் முழுவதும் பாமக 2.0 திட்டம்: புதிய தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி

அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ்

பாமக 2.0 செயல் திட்டம் மூலம் மக்களின் அன்றாட பிரச்சினைகளை சரி செய்து, மக்களின் ஆதரவை பெற போகிறோம். இனி பாமக 2.0 செயல் திட்டத்தை படி படியாக தமிழகத்தில் செயல்படுத்த உள்ளோம் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

    பாமக தலைவராக தேர்வு செய்யப்பட்ட அன்புமணி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ் தமிழகம் முழுவதும் பாமக 2.0 திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக தெரிவித்தார்.

    சென்னையில் நேற்று நடைபெற்ற பாமக சிறப்பு பொதுக்குழுவில் கட்சியின் தலைவராக அன்புமணி தேர்வு செய்யப்பட்டார். பாமக தலைவராக இருந்து வந்த ஜி.கே.மணி கவுரவ தலைவராக  நியமிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து அன்புமணி, ஜி.கே மணி ஆகியோர் சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில்  இன்றுசந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, வேலங்குடி பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என்றும் ஆதனூர் - குமாரமங்கலம் பகுதியில் தடுப்பணை கட்டுவதற்குகு 100 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்க வேண்டும் என்றும் முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்திருப்பதாக தெரிவித்தார்.  

    கட்சியின் வளர்ச்சிக்காக ஒவ்வொரு மாவட்டமாக, கிராமமாக சுற்று பயணம் மேற்கொள்ள உள்ளேன் எனவும், முக்கியமாக குடிநீர் பிரச்சினைகள், சேலம் உபரி நீர்திட்டம், அத்திகடவு முழுமையாக செயல்படும் திட்டம், பாலாறு தென் பெண்ணை ஆறு இணைக்கும் திட்டம், அனைத்து ஆறுகளிலும் தடுப்பணை கட்டும் திட்டம் உள்ளிட்டவை செயல்படுத்த உள்ளேன் எனவும் அன்புமணி தெரிவித்தார்.

    இதையும் படிங்க: தூய்மை பணியாளர் விவகாரம்: மதுரை மாநகராட்சி மேயர் மீது தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார்!


    கடந்த 25 வருடங்களாக  பாமகவின் தலைவராக தற்போதைய கௌரவ தலைவர் ஜி கே மணி சிறப்பாக செயல்பட்டு வந்ததாக பாராட்டு தெரிவித்த அன்புமணி,  ‘ பாமக 2.0 செயல் திட்டம் மூலம் மக்களின் அன்றாட பிரச்சினைகளை சரி செய்து, மக்களின் ஆதரவை பெற போகிறோம். இனி பாமக 2.0 செயல் திட்டத்தை படி படியாக தமிழகத்தில் செயல்படுத்த உள்ளோம்’ என  பேசினார்.

     
    Published by:Murugesh M
    First published:

    Tags: Anbumani ramadoss, CM MK Stalin, PMK, Ramadoss

    அடுத்த செய்தி