கட்சியில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருது வழங்கும் பாமக

கட்சியில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருது வழங்கும் பாமக

கட்சியில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருது வழங்கும் பாமக

சிறப்பாக பணியாற்றிய 5 பேருக்கு பாமக செயல்வீரர் விருதுகள் வழங்கப்படுவதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார்.

 • Share this:
  கட்சியில் சிறப்பாக பணியாற்றியவர்களை தேர்வுசெய்து அவர்களுக்கு இந்த ஆண்டு முதல் விருது வழங்குவதாக டிசம்பர் 11ம் தேதி பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் அறிவித்தார். அதன்படி 2020ம் ஆண்டுக்கான பாமக சிறந்த செயல் வீரர் விருதுகளைப் பெறுவதற்கான 5 செயல்வீரர்களை அவர் தேர்வுசெய்துள்ளார்.

  அவர்களின் விவரம் வருமாறு:

  1. முனைவர் ச.சிவப்பிரகாசம், தலைவர், சமூக முன்னேற்ற சங்கம்

  2. திரு. மீ.கா. செல்வக்குமார், அமைப்புச் செயலாளர், பாட்டாளி மக்கள் கட்சி

  3. திரு. திருத்துறைப்பூண்டி டி.எஸ்.ஆர்.எம். சுப்பிரமணிய அய்யர், மாநில துணைத்தலைவர், பாட்டாளி மக்கள் கட்சி

  Also read: 2021ம் ஆண்டு எந்தெந்த துறைகளில் முன்னேற்றம் இருக்கும்? பொருளாதார நிபுணர்களின் கருத்து என்ன

  4. திருமதி. நிர்மலா ராசா, மாநிலச் செயலாளர், பா.ம.க மகளிர் அணி

  5. திரு. பி.வி. செந்தில், மாநிலச் செயலாளர், பா.ம.க இளைஞரணி

  இந்த விருதுகள் பாராட்டுப் பத்திரம் மற்றும் ஒரு சவரன் தங்கக் காசு கொண்டதாக இருக்கும் என்றும் எதிர்வரும் 31.12.2020 வியாழக்கிழமை காலை நடைபெறவுள்ள ‘2020ம் ஆண்டுக்கு விடை கொடுப்போம்... 2021ம் ஆண்டை வரவேற்போம்’ சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் இவை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Rizwan
  First published: