எங்களது இலக்கு பூரண மதுவிலக்கு... ஒரு சொட்டு சாராயம் கூட இருக்கக் கூடாது..! அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ்

 • Last Updated :
 • Share this:
  தமிழக அரசுக்கு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்துக் கொண்டு இருக்கிறோம் எங்களது இலக்கு பூரண மதுவிலக்கு . ஒரு சொட்டு சாராயம் கூட இருக்கக்கூடாது என்பதுதான் எங்களது கோரிக்கை என பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

  விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் பூரண மதுவிலக்கை தற்போது ஏற்றுக்கொள்கிறார்கள். அதற்கு நாங்கள் தான் காரணம். தமிழக அரசுக்கு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்துக் கொண்டு இருக்கிறோம். எங்களது இலக்கு பூரண மதுவிலக்கு தான். ஒரு சொட்டு சாராயம் கூட இருக்கக்கூடாது என்பதுதான் எங்களது கோரிக்கை. சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் அணுகி பூரண மதுவிலக்கை தமிழ்நாட்டில் உறுதியாக கொண்டு வரும் என்றும் கூறினார்.

  மேலும், பாலியல் வன்கொடுமைக்கு எதிராக தமிழக அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குழந்தைகள் பெண்கள் மத்தியில் பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும் பாலியல் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் குழந்தைகள் பெண்களுக்கு எதிராக பாலியலில் ஈடுபடுபவர்கள் தூக்கிலிட வேண்டும் என்றும் நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை தொடர்ந்து தள்ளிப்போகிறது நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை தள்ளி வைக்கக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

  சிவகாசியில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். பாலியல் வன்கொடுமைக்கு எதிராக கடுமையான சட்டம் கொண்டு வரவேண்டும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும் என்றும் கூறினார்.

  தொடர்ந்து பேசிய அவர், 5 - 8ம் வகுப்பு பொதுத்தேர்வு தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது. இதை தமிழக அரசு உடனே திரும்பப் பெற வேண்டுமென்றும், ஹைட்ரோ கார்பன் திட்டம் என்பது ஒரு தேவையில்லாத ஒரு திட்டம் திமுக ஆட்சிக்காலத்தில் ஸ்டாலின் கையெழுத்திட்ட தொடங்கிய ஒரு திட்டம் என்றும் டெல்டா பகுதி ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக உணவு வழங்கும் பகுதியாக இருக்கிறது இதை சேதப்படுத்தி, நாசப்படுத்துவதை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

  மேலும், காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்றும் எங்கள் கோரிக்கை வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவையில் சட்டம் இயற்றி ஒரு தீர்மானத்தை கொண்டுவரவேண்டும் என்றும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 இல் நடைபெற்ற மோசடியில் ஈடுபட்டவர்கள் அனைவரையும் கைது செய்து உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைத்து முழுமையான விசாரணை நடத்திட வேண்டுமென்றும் அன்புமணி கூறியுள்ளார்.
  Published by:Sankaravadivoo G
  First published: