Home /News /tamil-nadu /

முதலமைச்சர் ஸ்டாலினை கர்மவீரர் காமராஜர் போல நினைக்கிறேன்..- பாமக எம்.எல்.ஏ. சதாசிவம் பேச்சு

முதலமைச்சர் ஸ்டாலினை கர்மவீரர் காமராஜர் போல நினைக்கிறேன்..- பாமக எம்.எல்.ஏ. சதாசிவம் பேச்சு

மு.க.ஸ்டாலின்- சதாசிவம்

மு.க.ஸ்டாலின்- சதாசிவம்

TN Assembly : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கர்மவீரர் காமராஜர் போல நினைக்கிறேன் என மேட்டூர் பாமக எம்.எல்.ஏ. சதாசிவம் தமிழக சட்டப்பேரவையில் கூறினார்.

    தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்திபோது, மேட்டூர் தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம், மேட்டூர் தொகுதி கொளத்தூர் ஒன்றியத்தில் தோனிமடுவு நீர்தேக்கம் வேண்டும் என கேள்வி எழுப்பி பேசினார். அப்போது, முதலமைச்சரை காமராஜர் போன்று நினைக்கிறேன். மன்னிக்கவும் புகழ்ந்து பேசுவதாக நினைக்காதிங்க. புகழ்ந்து பேச கூடாது, காரியம் நடக்கனும் என்று கலகலப்பாக பேசினார்.

    மேலும், மேட்டூர் தொகுதிக்குட்பட்ட கொளத்தூர் ஒன்றியத்தில் தோனிமடுவு நீர்தேக்க திட்டத்தினை செயல்படுத்துவதன் மூலம் 1,30,000 ஏக்கர் பயனடையும் என்று கூறினார். தொடர்ந்து பேசிய சதாசிவம், தோனிமடுவு என்ற இடத்தில் தடுப்பணை கட்டி நீரைத் தேக்கினால், கொளத்தூர் ஒன்றியம், அத்தியூர் ஒன்றியம், அம்மாபேட்டை ஒன்றியம் ஆகிய பகுதிகளில் உள்ள 1,10,000 ஏக்கர் விவசாய நிலம் பயனடையும் என்று கூறினார். மேலும், திமுக தேர்தல் அறிக்கையின் 107ஆவது பக்கத்தில், இங்கே தண்ணீர் தேக்கப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதனை நிறைவேற்றி தருமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

    இதற்கு பதிலளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், உங்களின் நோக்கமும், தொகுதி மீதான அக்கறையும் தெளிவாகத் தெரிகிறது, தோனிமடுவு நீர்தேக்கத் திட்டம் குறித்து அரசால், ஆய்வு செய்யப்பட்டு தொழில்நுட்ப ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், சாதகமற்ற சூழல் இருப்பதால் இந்த திட்டம் கைவிடப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தார்.

    பாமக எம்.எல்.ஏ. சதாசிவம்


    Must Read : கோடநாடு வழக்கு... 100க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு சசிகலா பதில் - இன்றும் விசாரணை

    மேலும், தடுப்பணை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் துரைமுருகன் அப்போது உறுதியளித்தார்.
    Published by:Suresh V
    First published:

    Tags: MK Stalin, PMK, TN Assembly

    அடுத்த செய்தி