ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மஹாராஷ்டிராவில் பாஜக ஆட்சி...! சந்தர்ப்பவாத அரசியல் என்று ராமதாஸ் விமர்சனம்

மஹாராஷ்டிராவில் பாஜக ஆட்சி...! சந்தர்ப்பவாத அரசியல் என்று ராமதாஸ் விமர்சனம்

பாமக நிறுவனர் ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ்

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  மஹாராஷ்டிராவில் திடீர் திருப்பமாக பாஜக ஆட்சி அமைத்துள்ள நிலையில், சந்தர்ப்பவாத அரசியல் எவ்வளவு வேகமாக பயணிக்கிறது என்பதற்கு இதுவே சாட்சி என்று பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார்.

  மஹாராஷ்டிராவில் பாஜக இன்று காலை ஆட்சியமைத்தது. தேவேந்திர பட்நாவிஸ் முதல்வராகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றார்.

  தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கும் அஜித் பவாரின் முடிவுக்கும் தொடர்பு இல்லை என்று அக்கட்சியின் தலைவர் சரத் பவார் கூறினார்.

  தேசிய அளவில் இந்த அரசியல் மாற்றம் பல தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு, சிவசேனா தலைமையில் ஆட்சியமையும் என்று சரத்பவார் கூறிய நிலையில், இந்த திடீர் அரசியல் திருப்பம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  இந்த நிலையில், இது தொடர்பாக பாமக நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் பதிவிட்டுள்ள ட்வீட்டில், மராட்டியத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவுடன் இணைந்து ஆட்சியமைத்தது பாரதிய ஜனதா. காலை நாளிதழ் செய்திகளில் சிவசேனா ஆட்சி. காலை தொலைக்காட்சி செய்திகளில் பாஜக ஆட்சி. மராட்டியத்தில் சந்தர்ப்பவாத அரசியல் எவ்வளவு வேகமாக பயணிக்கிறது என்பதற்கு இதுவே சாட்சி!” என்று குறிப்பிட்டுள்ளார்.

  Published by:Sankar
  First published:

  Tags: Ramadoss