Home /News /tamil-nadu /

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை.. வாக்குறுதியை நிறைவேற்ற தமிழக அரசுக்கு அன்புமணி கோரிக்கை

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை.. வாக்குறுதியை நிறைவேற்ற தமிழக அரசுக்கு அன்புமணி கோரிக்கை

அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ்

Anbumani Ramadoss : புதுச்சேரி குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ. 1000 வழங்கும் திட்டம் அம்மாநில நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. இதனை வரவேற்று அன்புமணி ராமதாஸ் ட்வீட் செய்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai | Tamil Nadu
    புதுச்சேரியை போல் தமிழ்நாட்டிலும் குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ. 1000 வழங்கும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ட்வீட் செய்துள்ளார்.

    புதுச்சேரி குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ. 1000 வழங்கும் திட்டம் அம்மாநில நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. இதனை வரவேற்று அன்புமணி ராமதாஸ் ட்வீட் செய்துள்ளார்.

    அதில், புதுச்சேரியில் 21 வயது முதல் 57 வயது வரையிலான குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என குறிப்பிட்டிருந்தார்.

    மேலும், 21 வயதுக்கும் மேற்பட்ட குடும்பத் தலைவிகளுக்கு மட்டும்தான் உதவித்தொகை என அறிவிக்கப்பட்டிருப்பதன் மூலம் 21 வயதுக்கு முன்பு திருமணம் செய்வது குறையும் எனவும் பெண்கள் சமுதாய மேம்பாட்டிற்கும் வழிவகுக்கும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.



    தமிழ்நாட்டில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. ஆனால் இரு நிதிநிலை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என குற்றம்சாட்டினார்.

    குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை வழங்குவது சமூக முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும் என்பதால் தாமதிக்காமல் உடனடியாக உரிமைத்தொகை குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: Anbumani ramadoss, DMK, Pondicherry

    அடுத்த செய்தி