ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழகத்தில் பாமக தலைமையில் ஆட்சி என நான் எங்கேயும் பேசவில்லை - அன்புமணி ராமதாஸ் விளக்கம்

தமிழகத்தில் பாமக தலைமையில் ஆட்சி என நான் எங்கேயும் பேசவில்லை - அன்புமணி ராமதாஸ் விளக்கம்

அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ்

2026-ம் ஆண்டு தமிழ்நாட்டில் பாமக தலைமையிலான ஆட்சி அமையும் என நான் எங்கேயும் பேசவில்லை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்காக நாடு முழுவதும் அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. மத்தியில் எதிர்க்கட்சிகளை ஓரணியில் இணைத்து பாஜகவுக்கு எதிராக தேர்தலை சந்திக்கும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார். இந்த கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம்பெறும் எனும் விவாதம் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.

  இந்நிலையில், இரு தினங்களுக்கு முன் செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுக மற்றும் அதிமுகவில் கட்சிகளுக்குள்ளேயே ஏராளமான முரண்பாடுகள் உள்ளதாக கூறினார். இதனை தொடர்ந்து சென்னையில்  செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ், 2026-ம் ஆண்டு தமிழ்நாட்டில் பாமக தலைமையில் ஆட்சி அமையும் என தெரிவித்தார்.

  மேலும், தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் வகையில், 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான வியூகம் அமைக்கப்படும் என்றும் கூறினார். 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ள நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அளித்துள்ள விளக்கம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியது.

  Also Read : மக்களின் வாழ்க்கைத் தரம், மகிழ்ச்சியே வளர்ச்சியின் அளவீடு - முதல்வர் ஸ்டாலின்

  இதனிடையே இன்று செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ், "கூட்டணி குறித்து நான் எங்கேயும் பேசவில்லை. அதற்குள் நீங்களே ஒரு கூட்டணி இருக்கா? இல்லையா? என்பதை போட்டு உள்ளீர்கள். நான் சொன்னது என்ன என்றால், 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற பொது தேர்தலில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைப்போம். அதற்கு ஏற்ப வியூகங்களை 2024 பாராளுமன்ற தேர்தலில் அமைப்போம் என்று தான் சொல்லி இருக்கிறேன்.

  இதில் நாங்கள் எந்த முடிவையும் எடுக்கவில்லை. எங்களுடைய நோக்கம் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும். அதற்குண்டான யுக்திகளையும், வியூகங்களையும் 2024 பாராளுமன்றத் தேர்தலின் போது எடுப்போம்" என்றார்.

  Published by:Vijay R
  First published:

  Tags: Anbumani ramadoss, PMK