முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழகத்தில் போதை பொருள் அதிகமாகிவிட்டது: அன்புமணி ராமதாஸ்

தமிழகத்தில் போதை பொருள் அதிகமாகிவிட்டது: அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ்

Anbumani ramadoss: பள்ளி மாணவர்கள் கஞ்சா பிடிப்பதை  சமூக வலைதளங்களில் பார்த்து அதிர்ச்சி அடைந்ததாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேதனை தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tambaram, India

தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட  போதை பொருட்கள் விற்பனை அதிகமாக இருப்பதாகவும், சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு போய் இருப்பதாகவும், கூலிப்படையை அடியோடு தமிழக அரசு ஒழிக்க வேண்டும் எனவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

யோனக்ஸ் சன்ரைஸ் அகில இந்திய மாஸ்டர்ஸ் ரேங்கிங் பேட்மிண்டன் போட்டி சென்னை தாம்பரம் அடுத்த மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக அரங்கில் நடைபெற்றது. டால்பின் ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மெண்ட் அமைப்பு, தமிழ்நாடு மாநில பேட்மிண்டன் சங்கம் மற்றும் அகில இந்திய பேட்மிண்டன் சங்கத்தின் ஆதரவோடு இந்த போட்டிகளை நடத்தியது.

இதில் 35 வயது முதல் 75 வயது வரையிலான வயதுப்பிரிவுகளில் 1000க்கம் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

Also Read:  சொல்லதிகாரம்: புத்தம் புதிய விவாத நிகழ்ச்சி.. இன்று முதல் நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியில்!

போட்டிகளின் முடிவில் இந்திய பேட்மிண்டன் சங்க துணைதலைவரும், தமிழக பேட்மிண்டன் சங்க தலைவரும், பாட்டாளி மக்கள் கட்சி தலைவருமான அன்புமணி ராமதாஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு  பரிசுகளை  வழங்கினார்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், தமிழகத்தில் கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் அதிகமாக இருப்பதாகவும் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதாகவும் , அதே நேரத்தில் பள்ளி மாணவர்கள் கஞ்சா பிடிப்பதை  சமூக  வலைதளங்களில்  பார்த்து அதிர்ச்சி அடைந்ததாகவும் தெரிவித்தார்.

போதை பொருட்களை அடியோடு ஒழிக்க வேண்டும், அதே நேரத்தில் மதுவை படிப்படியாக குறைக்க வேண்டும் என்றும்,கூலிப்படையை தமிழக அரசு அடியோடு ஒழிக்க வேண்டும் எனவும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

First published:

Tags: Anbumani ramadoss, Badminton, PMK, Tamilnadu