நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில்
பாமக தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. அதன்படி, பாமக வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 19ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகின்றன. வேட்பாளர் தேர்வு, கூட்டணி கட்சிகளுக்கு இடம் ஒதுக்கீடு என அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டது போன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி தனித்து போட்டியிடவுள்ளது.
சென்னை தியாகராயர் நகரிலுள்ள பாமக அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலை அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டார்.முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். சென்னையில் உள்ள 200 வார்டுகளுக்கும், சேலம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.மணி, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அனைத்து மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தல்களில் பாமக தனித்து போட்டியிடும் என்று தெரிவித்தார். இந்த தேர்தலில், பெண்கள், வழக்கறிஞர்கள், புது முகங்கள் என பல்வேறு தரப்பினருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: 1820 மருத்துவர்கள் திடீர் நீக்கம் செய்யப்பட்டது அநீதி..ராமதாஸ் கண்டனம்
தென் மாவட்டங்களிலும் பாமகவுக்கு செல்வாக்கு உள்ளதாக குறிப்பிட்ட ஜி.கே.மணி, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் local understanding செய்துகொண்டு மற்ற கட்சி வேட்பாளருக்கு யாராவது உதவி செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.