• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • EXCLUSIVE: அதிமுக கூட்டணியில் தொடர்கிறோம்: பாமக விளக்கம்

EXCLUSIVE: அதிமுக கூட்டணியில் தொடர்கிறோம்: பாமக விளக்கம்

பாமக

பாமக

உள்ளாட்சித் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கான நாள் மிகவும் குறைவாக இருப்பதாலேயே தனித்து போட்டியிடுவதாக பாமக தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

  • Share this:
    உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் அதேவேளையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தாங்கள் தொடர்வதாக பாமக தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார்.

    தமிழகத்தின் 9 மாவட்டங்களுக்கு அடுத்த மாதம் இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.

    மேலும், பாமகவால் கூட்டணி கட்சிகள் பலனடைந்துள்ளதாகவும் மாறாக அவர்களால் பாமகவுக்கு எந்த பலனும் இல்லை என்றும் சரியான தலைமை இல்லாததால், அதிமுக தொண்டர்கள் பாமகவுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அதிமுக வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில் நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பாமக தலைவர் ஜி.கே.மணி, “ நேற்று மாலை நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில், வேட்புமனு தாக்கல் செய்வதற்கான நாள் மிகவும் குறைவாகவே உள்ளது என்றும் நாங்கள் தனித்தே போட்டியிடுகிறோம் என்றும் நிர்வாகிகள் ஒருமனதாக தெரிவித்தனர். அதன் அடிப்படையிலேயே தனித்து போட்டியிடும் முடிவை எடுத்துள்ளோம்.

    இதையும் படிங்க: அதிமுகவை விமர்சிக்க யாருக்கும் தகுதியில்லை: பாமகவுக்கு ஜெயக்குமார் பதில்!


    அதேவேளையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக  தொடர்கிறது. தற்போது நடைபெறவுள்ளது ஊரக உள்ளாட்சித் தேர்தல்தான். உள்ளூர் மக்களின் செல்வாக்கை நிரூபிப்பதற்கான தேர்தல் இது. அரசியலை நிர்ணயிப்பதற்கான தேர்தல் அல்ல. தனித்து போட்டியிடுவதற்கு உள்நோக்கம் கற்பிக்கக் கூடாது” என்று தெரிவித்தார்.



    மேலும், அதிமுக தொடர்பாக எவ்வித விமர்சனத்தையும் மருத்துவர் ராமதாஸ் முன்வைக்கவில்லை என்றும் தெர்வித்த ஜி.கே.மணி,  “. இதுவே சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல் என்றால் சீக்கிரம் பேசி முடித்துவிடலாம். உள்ளாட்சித் தேர்தலுக்கான நாள் மிகவும் குறைவாக உள்ளதால் தற்காலிகமாக எடுக்கப்பட்ட முடிவுதான் இது” என்று விளக்கமளித்தார். தனித்து போட்டியிடும் முடிவால் யாருக்கும் இழப்பு இல்லை என்றும் அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: