முகப்பு /செய்தி /தமிழ்நாடு / “ஆங்கிலத்தில் பெயர் பலகை.. ஒரு மாதம்தான் கெடு..” பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை!

“ஆங்கிலத்தில் பெயர் பலகை.. ஒரு மாதம்தான் கெடு..” பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை!

ராமதாஸ்

ராமதாஸ்

ஒரு மாதம் கழித்து கருப்பு மை வாளியோடு ஏணியோடு இதையெல்லாம் மாற்றப் போகிறோம் - ராமதாஸ்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Dindigul, India

தனியார் பள்ளிகளில் ஆங்கிலத்தில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை ஒரு மாதத்திற்குள் அகற்றாவிட்டால், கருப்பு மை பூசி அழிப்போம் என பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை முதல் மதுரை வரை ’தமிழைத் தேடி’ எனும் பிரசார பயணத்தை பாமக நிறுவனர் ராமதாஸ் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அவர், ஆங்கில வழியில் கல்வி பயிற்றுவிக்கும் தனியார் பள்ளிகள் அரசின் சட்டவிதிகளை மதிக்க வேண்டும் என கூறினார்.

படித்தவர்கள், படிக்காதவர்கள் என வேறுபாடின்றி அனைவருமே ஆங்கிலம் கலந்து தமிழைப் பேசுவது வேதனை அளிப்பதாகவும் ராமதாஸ் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழகம் முழுவதும் தமிழைத் தேடி செல்லுகிறேன். நான் எங்கும் தமிழை பார்க்கவில்லை. மதுரையில் பார்ப்பேனா, பார்க்க மாட்டேனா? என்ற ஒரு ஆதங்கம். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். இந்த பக்கம் அந்த பக்கம் விளம்பர பலகை. அடுத்த முறை வரும் போது தமிழ்மொழியில் எழுதியிருக்க வேண்டும். இல்லையென்றால் இதனை அழிக்க கருப்பு மை வாளியுடன் வந்துவிடுவார்கள்.

10 பங்கில் 5 பங்கு நம்முடைய தமிழ்மொழியில் 3 பங்கு ஆங்கிலத்தில் 2 பங்கு நீங்கள் விரும்பிய மொழியில் மலையாளமோ, கன்னடமோ, இந்தியோ, மராத்தியோ எழுதிக்கொள்ளலாம். ஆனால் இந்த சட்டத்தை யாராவது இங்கு கடைபிடித்திருக்கிறார்களா? ஒரு மாதம் கழித்து கருப்பு மை வாளியோடு ஏணியோடு இதையெல்லாம் மாற்றப் போகிறோம். அதற்குள் அவர்களே மாற்றி விடுவார்கள்.

அரசு சட்டங்கள் போட்டாலும் இந்த பள்ளிகள் அதை மதிப்பதில்லை. அவர்கள் உடனே உயர்நீதிமன்றத்திற்கும்,  உச்சநீதிமன்றத்திற்கும் போகிறார்கள். நீங்கள் எல்லாம் தமிழர்கள். உயர்நீதிமன்றத்திற்கும் உச்சநீதிமன்றத்திற்கும் போகாதீர்கள். அப்படி நாம் அவர்களிடம் பணிந்து கேட்டுக்கொள்கிறோம்.

கையோடு வாளி, ஏணியோடு கருப்பு மையோடு நாங்கள் வருவோம். அப்போது அதற்குள்ளே இந்த விளம்பர பலகைகளில் பெயர்கள் எல்லாம் பெரிய மாற்றம் ஏற்படும் என்று நம்புகிறோம்” என தெரிவித்தார்.

First published:

Tags: PMK, Ramadoss, Tamil