முகப்பு /செய்தி /தமிழ்நாடு / 6 தமிழர்களின் விடுதலை ஆளுநரால்தான்  4 ஆண்டுகள் தாமதம் : ராமதாஸ்

6 தமிழர்களின் விடுதலை ஆளுநரால்தான்  4 ஆண்டுகள் தாமதம் : ராமதாஸ்

ராமதாஸ் ட்வீட்

ராமதாஸ் ட்வீட்

6 தமிழர்களின் விடுதலைக்கு 09.09.2018-இல் தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானம்தான் அடிப்படை. அமைச்சரவை தீர்மானத்தை அப்போதே ஆளுநர் ஏற்றுக் கொண்டிருந்தால் அப்போதே அவர்கள் விடுதலையாகியிருப்பார்கள். இப்போது 4 ஆண்டுகள் தாமதமாக விடுவிக்கப்பட்டுள்ளனர்! - ராமதாஸ்

மேலும் படிக்கவும் ...
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி உச்சநீதிமன்றம் 6 பேரை இன்று விடுதலை செய்தது. இதற்கு பாமாக நிறுவனர் ராமதாஸ், இந்த தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

இது குறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- ராஜிவ் கொலை வழக்கில் தண்டனைக் காலத்தை நிறைவு செய்த பிறகும் சிறை தண்டனை அனுபவித்து வந்த நளினி, முருகன், ரவிச்சந்திரன், சாந்தன், இராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இந்தத் தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது!

6 தமிழர்களின் நன்நடத்தை, கல்வித் தகுதி மேம்பாடு ஆகியவற்றின் அடிப்படையில், பேரறிவாளன் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு, அவர்கள் விடுதலை செய்யப்படுவதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்திருக்கிறது. இது வரவேற்கத்தக்கது!

மேலும், 6 தமிழர்களின் விடுதலைக்கு 09.09.2018-இல் தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானம்தான் அடிப்படை. அமைச்சரவை தீர்மானத்தை அப்போதே ஆளுநர் ஏற்றுக் கொண்டிருந்தால் அப்போதே அவர்கள் விடுதலையாகியிருப்பார்கள். இப்போது 4 ஆண்டுகள் தாமதமாக விடுவிக்கப்பட்டுள்ளனர்!

அமைச்சரவையின் முடிவுகள் மீது ஆளுநர்கள் முடிவெடுக்க காலவரம்பு நிர்ணயிக்கப்படாததுதான் பல சிக்கல்களுக்கு காரணம் ஆகும். இந்த நிலையை மாற்ற அமைச்சரவையின் பரிந்துரை, தீர்மானம் ஆகியவற்றின் மீது ஆளுநர்கள் முடிவெடுக்க காலவரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும்!

இவ்வாறு அந்த ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

First published:

Tags: Dr Ramadoss, Rajiv Gandhi Murder case, Supreme court