சிறப்பு மருத்துவர்கள் பணியிட மாற்றத்தில் குளறுபடி... ராமதாஸ் குற்றச்சாட்டு...!

சிறப்பு மருத்துவர்கள் பணியிட மாற்றத்தில் குளறுபடி... ராமதாஸ் குற்றச்சாட்டு...!
பாமக நிறுவனர் ராமதாஸ்.
  • News18
  • Last Updated: November 30, 2019, 6:22 PM IST
  • Share this:
சிறப்பு மருத்துவர்கள் நியமனத்தில் இருக்கும் குளறுபடிகளை சரி செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் அவர் விடுத்துள்ள செய்தியில், இந்திய மருத்துவக் கவுன்சில் விதிகளின்படி நடத்தப்பட்ட சிறப்பு மருத்துவர்கள் பணியிட மாற்றத்தில் நிகழ்ந்துள்ள குளறுபடிகள் மிகவும் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்தார்.

சிறுநீரகவியல் துறை பேராசிரியரை இதயநோய் துறையிலும், முடநீக்கியல் துறை பேராசிரியரை குழந்தைகள் மருத்துவப் பிரிவிலும், காது, மூக்கு, தொண்டை சிகிச்சை பிரிவு மருத்துவரை நரம்பியல் துறையிலும் இடமாற்றம் செய்வதால் யாருக்கு என்ன பயன் என்றும் மருத்துவர்கள் இடமாற்றம் அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தினார்.

Also see...
First published: November 30, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading