ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழ்நாடு உருவாக்கப்பட்ட நாளே தமிழ்நாடு நாள்: ராமதாஸ்

தமிழ்நாடு உருவாக்கப்பட்ட நாளே தமிழ்நாடு நாள்: ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ்

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது நாம் அடைந்ததை விட இழந்தது அதிகம் - பாமக நிறுவனர் ராமதாஸ்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தமிழ்நாடு உருவாக்கப்பட்ட நாளான இன்று இழந்த உரிமைகளை மீட்டெடுக்க உறுதியேற்பம் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து, தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

  மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, இன்றைய தமிழ்நாடு உருவாக்கப்பட்ட நாளான நவம்பர் 1ம்  தேதி தான் நமக்கு தமிழ்நாடு நாள். இந்த நாளில் தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும் எனது தமிழ்நாடுநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது நாம் அடைந்ததை விட இழந்தது அதிகம். அது தான் தமிழ்நாட்டுக்கு வெளியில் உள்ள தமிழர்கள் அநீதிகளை எதிர்கொள்வதற்கும், தமிழகத்தின் பல உரிமைகள் பறிபோகவும் காரணமாகும். நாம் இழந்த உரிமைகள் உள்ளிட்ட அனைத்தையும் மீட்டெடுக்க உறுதியேற்போம்.

  இதையும் வாசிக்கஇனி தமிழ்மொழியில் மருத்துவ பாடப் புத்தகங்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன குட்நியூஸ்!

  தமிழ்நாட்டின் இன்றைய நிலப்பரப்பு தமிழர்களின் மாநிலமாக 01.11.1956 அன்று நடைமுறைக்கு வந்த நிலையில், அதற்கு தமிழ்நாடு என்ற பெயரை அண்ணா 1969-ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி தான் சூட்டினார். அந்த நாளையும் அதற்குரிய சிறப்புடன் கொண்டாட அரசு முன்வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

  Published by:Salanraj R
  First published:

  Tags: Ramadoss