வேட்பாளர் வெற்றி பெற்றவுடன் எனக்கு 3 கூடை மாம்பழம் தர வேண்டும் - கலகலப்பாக ராமதாஸ் பிரச்சாரம்

பிரச்சாரத்தில் ராமதாஸ்

பா.ம.க வேட்பாளர் செல்வகுமார் வெற்றிபெற்றவுடன் எனக்கு 3 கூடை மாம்பழம் தரவேண்டும் என்று பிரச்சாரத்தில் ராமதாஸ் பேசியுள்ளார்.

 • Share this:
  தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. அதனையடுத்து, கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்த அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் தமிழகம் முழுவதும் சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில், பா.ம.க நிறுவனர் ராமதாஸ் நேற்று வாகனத்தில் இருந்தபடியே பிரச்சாரத்தில் ஈடுபட்டார். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தொகுதி பா.ம.க வேட்பாளர் முரளி சங்கரை ஆதரித்து பிரசாரம் செய்தார். பின்னர் கீழ்பெண்ணாத்தூர் தொகுதி பா.ம.க வேட்பாளர் செல்வகுமாரை ஆதரித்து கீழ்பெண்ணாத்தூர் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் கிராமத்தில் பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் காரில் அமர்ந்தபடி தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

  பெண்கள், இளைஞர்கள் என அனைத்துத் தரப்பினரும் வீடு வீடாகச் சென்று திண்ணைப் பிரச்சாரம் செய்து மாம்பழம் சின்னத்தில் மக்கள் வாக்களிக்க செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்ட அவர், இந்த தொகுதியில் வேட்பாளர் செல்வகுமார் வெற்றி உறுதி என்றும், வேட்பாளர் வெற்றி பெற்றவுடன் 3 கூடை மாம்பழம் எனக்கு கொண்டு வர வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: