Home /News /tamil-nadu /

''சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற்று மானியத்தை அதிகரிக்க வேண்டும்'' - ராமதாஸ் வலியுறுத்தல்

''சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற்று மானியத்தை அதிகரிக்க வேண்டும்'' - ராமதாஸ் வலியுறுத்தல்

பாமக நிறுவனர் ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ்

ஒரு காலத்தில் சமையல் எரிவாயு விலை 400 ரூபாயைத் தாண்டக் கூடாது என்பதற்காக மானியத் தொகை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வந்தது.

    வீட்டு உபயோகத்திற்கான சமையல் சிலிண்டர் விலை உயர்ந்துள்ள நிலையில் அதனை திரும்பப் பெற்று சிலிண்டருக்கு வழங்கப்பட்டு வரும் மானியத்தை அதிகரிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது-

    "சமையல் எரிவாயு விலை மீண்டும் உருளைக்கு ரூ.50 உயர்த்தப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து சென்னையில் ஒரு சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.1,015.50 ஆக அதிகரித்திருக்கிறது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் இது கூடுதல் சுமையாகும்.

    சமையல் எரிவாயு விலை கடந்த ஓராண்டில் 10 தவணைகளில் ரூ.305 உயர்த்தப்பட்டிருக்கிறது. இது 44 % உயர்வு ஆகும். மிக மிக அத்தியாவசியப் பொருளான சமையல் எரிவாயு விலை ஒரே ஆண்டில் 44 % உயர்த்தப்படுவதை ஏற்க முடியாது. இதை ஏழை, நடுத்தர மக்களால் தாங்கிக் கொள்ள முடியாது.

    இதையும் படிங்க - ‘’நான் எவ்வளவு ஆண்டுகள் இருப்பேன் என தெரியவில்லை’’ - துரைமுருகன் பேரவையில் உருக்கமான பேச்சு..

    ஒரு காலத்தில் சமையல் எரிவாயு விலை 400 ரூபாயைத் தாண்டக் கூடாது என்பதற்காக மானியத் தொகை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வந்தது. 2018 ஆம் ஆண்டு நவம்பரில் மானியத்தின் அளவு ரூ.435 என்ற உச்சத்தை தொட்டது. ஆனால், இப்போது மானியம் ரூ.24.95 ஆக குறைக்கப்பட்டு விட்டது.

    இதையும் படிங்க - திமுக அரசின் ஓராண்டு சாதனை ஆட்சியை பாமக மனதார பாராட்டுகிறது: ஜி.கே.மணி 

    ஒருபுறம் விலை அதிகரிக்கும் நிலையில், மறுபுறம் மானியம் குறைக்கப்படுவது இரட்டைத் தாக்குதலாக அமைந்துவிடும். மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்; மானியத்தின் அளவை படிப்படியாக உயர்த்த வேண்டும்."
    இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
    Published by:Musthak
    First published:

    Tags: LPG Cylinder

    அடுத்த செய்தி