முகப்பு /செய்தி /தமிழ்நாடு / “நீதி கேட்டு போராடும் உரிமை அனைவருக்கும் உண்டு” தமிழ்நாட்டு மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு ராமதாஸ் கண்டனம்!

“நீதி கேட்டு போராடும் உரிமை அனைவருக்கும் உண்டு” தமிழ்நாட்டு மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு ராமதாஸ் கண்டனம்!

ராமதாஸ்

ராமதாஸ்

தந்தை பெரியார், கார்ல் மார்க்ஸ் உள்ளிட்ட தலைவர்களின் உருவப்படங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இவை கண்டிக்கத்தக்கவை - ராமதாஸ்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ்நாட்டு மாணவர்கள் உள்ளிட்டோர் மீது ABVPஅமைப்பினர் தாக்குதல் நடத்தியதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மும்பை ஐஐடியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் உயிரிழந்த தலித் மாணவர் தர்ஷன் சொலான்கியின் மரணத்துக்கு நீதிகேட்டு, டெல்லி ஜே.என்.யூ. பல்கலைக்கழகத்தில் இடது சாரி மாணவர் அமைப்பினர் ஊர்வலம் நடத்தினர். பின்னர் மாணவர்கள் சங்க அலுவலகத்தில் ஆவணப்படம் ஒன்று திரையிடப்பட இருந்தது.

இந்த நிகழ்ச்சியின்போது தமிழ்நாட்டு மாணவர்கள் உட்பட இடதுசாரி மாணவர்களுக்கும்-ஏபிவிபி அமைப்பை சேர்ந்தோருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. பின்னர் கைகலப்பு ஏற்பட்ட நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் நாசருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. மேலும் அங்கிருந்த பெரியார், அம்பேத்கர், கார்ல் மார்க்ஸ் படங்களை அடித்து சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதனை மறுத்துள்ள ஏபிவிபி அமைப்பினர் சத்ரபதி சிவாஜி புகைப்படத்தை இடதுசாரி அமைப்பினர் தரையில் வைத்ததாகவும், சிவாஜி சிலைக்கு வைத்த மாலையை குப்பையில் வீசியதால் பிரச்னை எழுந்ததாகவும் தெரிவித்துள்ளனர். காயமடைந்த மாணவர்கள் சிகிச்சை முடிந்து மீண்டும் விடுதிக்கு திரும்பியுள்ளனர். இந்த தகராறு தொடர்பாக டெல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது நடந்த தாக்குதல் கோழைத்தனமானது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.டெல்லி நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாட்டு மாணவர்களின் பாதுகாப்பை பல்கலைக்கழக நிர்வாகம் உறுதிசெய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதனை தொடர்ந்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராமதாஸ், “டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்க்கழகத்தில் இன்று நடைபெற்ற பேரணியின் போது தமிழ்நாட்டைச் சேர்ந்தோர் உள்ளிட்ட மாணவர்கள் தாக்கப்பட்டிருக்கின்றனர். தந்தை பெரியார், கார்ல் மார்க்ஸ் உள்ளிட்ட தலைவர்களின் உருவப்படங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இவை கண்டிக்கத்தக்கவை.

பல்கலைக்கழக வளாகங்களில் நீதி கேட்டு போராடும் உரிமை அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. அதை தடுக்கும் உரிமை யாருக்கும் வழங்கப்படவில்லை. மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என தெரிவித்தார்.

First published:

Tags: ABVP, JNU, Students