Home /News /tamil-nadu /

அறிவுத் தீனி தேடி வரும் மாணவர்களின் வயிற்றுப் பசியை போக்கும் திட்டம் - முதல்வர் ஸ்டாலினை பாராட்டிய ராமதாஸ்

அறிவுத் தீனி தேடி வரும் மாணவர்களின் வயிற்றுப் பசியை போக்கும் திட்டம் - முதல்வர் ஸ்டாலினை பாராட்டிய ராமதாஸ்

முதல்வர் ஸ்டாலினை பாராட்டிய ராமதாஸ்

முதல்வர் ஸ்டாலினை பாராட்டிய ராமதாஸ்

பள்ளியில் சேர்ந்த மாணவர்களை தக்கவைத்துக் கொள்ள அவர்களின் பசியைப் போக்க வேண்டியது மிகவும் அவசியம். அதற்கு காலை சிற்றுண்டி திட்டம் பெரிதும் உதவும் என ராமதாஸ் பாராட்டு

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த காலை சிற்றுண்டி திட்டத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். மாநகராட்சி, நகராட்சி, ஊரக மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 1,14, 095 தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு முதற்கட்டமாக காலை உணவு வழங்கும் திட்டத்தை ரூ.33.56 கோடி செலவில் செயல்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    அரசு பள்ளிகளில் 5ம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டத்தை முன்னாள் முதலமைச்சர் மறைந்த அண்ணாவின் பிறந்தநாளான இன்று இத்திட்டத்தை மதுரை நெல்பேட்டை ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் முதல் கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து மாணவர்களுடன் அமர்ந்து உணவு  சாப்பிட்டார்.

    மாணவர்களுடன் அமர்ந்து சிற்றுண்டி சாப்பிடும் முதல்வர் ஸ்டாலின்


    தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டம் தொடர்பான #TNBreakfast என்னும் ஹேஷ்டேக் தமிழகம் மட்டுமல்லாது தேசிய அளவிலும் ட்ரெண்ட் ஆனாது. இந்த நிலையில் இந்த திட்டத்தை பாமக நிறுவனம் ராமதாஸ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டியுள்ளார்.

    இதையும் படிங்க: TN Breakfast: தேசிய அளவில் ட்ரெண்ட் ஆகும் தமிழகத்தின் காலை சிற்றுண்டி திட்டம்

    இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராமதாஸ், தமிழ்நாட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்திருக்கிறார். அறிவுத் தீனி தேடி வரும் மாணவச் செல்வங்களின் வயிற்றுப் பசியை போக்குவதற்கான இந்தத் திட்டம் நல்ல தொடக்கம் ஆகும் என பாரட்டினார்.


    மேலும் ஐந்து வயதான அனைத்து குழந்தைகளையும் பள்ளிகளுக்கு கொண்டு வருவதில் நாம் வெற்றி பெற்றிருக்கிறோம். பள்ளியில் சேர்ந்த மாணவர்களை தக்கவைத்துக் கொள்ள அவர்களின் பசியைப் போக்க வேண்டியது மிகவும் அவசியம். அதற்கு இந்தத் திட்டம் பெரிதும் உதவும் என ராமதாஸ் பாராட்டியுள்ளார்.

    தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் அனைத்து பள்ளிகளுக்கும் இந்தத் திட்டம் விரிவாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ள ராமதாஸ்,மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவுகளில் படிப்படியாக சிறு தானியங்களை சேர்த்து, அவர்களின் ஊட்டச் சத்தை மேம்படுத்த வேண்டும் என ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
    Published by:Arunkumar A
    First published:

    Tags: CM MK Stalin, DMK, Dr Ramadoss, PMK, Twitter

    அடுத்த செய்தி