• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • அதிமுக கூட்டணியில் நீடிக்குமா பாமக? 31 ம் தேதி முக்கிய முடிவு

அதிமுக கூட்டணியில் நீடிக்குமா பாமக? 31 ம் தேதி முக்கிய முடிவு

பாமக நிறுவனர் ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ்

பா.ம.க நிர்வாகக் குழுக் கூட்டம் ஜனவரி 31-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அந்தக் கூட்டத்தில் அ.தி.மு.கவுடனான கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது.

  • Share this:
    தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில், தி.மு.க, அ.தி.மு.க ஆகிய கட்சிகள் தங்களுடைய கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைப்பதில் கவனம் செலுத்திவருகின்றன. தி.மு.கவைப் பொறுத்தவரை, நாடாளுமன்றத் தேர்தலின்போது இணைந்து போட்டியிட்ட கட்சிகள் தற்போது ஒன்றாக செயல்பட்டுவருகின்றன. ஆனால், அ.தி.மு.கவுடன் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொண்ட பா.ஜ.க, பா.ம.க ஆகிய கட்சிகள் அ.தி.மு.கவுடன் இணக்கமாக இல்லை. முன்னதாக, வன்னியர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு, கல்வியில் 20 சதவீத இடஒதுக்கீடுகோரி பா.ம.க சார்பில் பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, பா.ம.க இளைஞரணிச் செயலாளர் அன்புமணி ராமதாஸ், முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

    அதனையடுத்து, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால், தமிழக அரசின் அறிவிப்பை ராமதாஸ் ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னர், பா.ம.க சார்பில் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கப்படவேண்டும் என்று கோரிக்கைவைக்கப்பட்டது. இந்த கோரிக்கைக்கு ஒப்புக்கொள்ளும் கட்சியுடன் கூட்டணி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    இந்தநிலையில், வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு விவகாரம் குறித்து ஆலோசிக்கவும், அந்த விவகாரம் தொடர்பாக அரசியல் நிலைப்பாடு எடுப்பதற்காக நாளை பா.ம.க நிர்வாகக் குழு கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, அந்தக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக பா.ம.க தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கோரும் விஷயத்தில் அரசியல் முடிவு எடுப்பதற்காக பா.ம.க நிர்வாகக் குழு கூட்டம் நாளை காலை 11 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அந்தக் கூட்டம் நிர்வாகக் காரணங்களுக்காக வரும் 31-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்று காலை 11 மணிக்கு இணைய வழியில் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெறவிருக்கிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: