சென்னை அருகே பேருந்து மோதி பாமக நிர்வாகி உயிரிழப்பு... பேருந்தை தீயிட்டு கொளுத்திய கிராம மக்கள்

எரிக்கப்பட்ட பேருந்து

திருவள்ளூர் மாவட்டத்தில் சாலை விபத்தில் பாமக நிர்வாகி உயிரிழந்ததால், ஆத்திரமடைந்த கிராமத்தினர் சம்பந்தப்பட்ட பேருந்தை தீயிட்டு கொளுத்தினர்.

 • Share this:
  சென்னையை அடுத்த பட்டாபிராம் அமுதூர்மேடு பகுதியைச் சேர்ந்த 45 வயதான கார்த்திக், பாமகவின் திருவள்ளூர் மாவட்ட இளைஞரணி தலைவராக பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில், அணைக்கட்டுச்சேரி பகுதியில் இருந்து தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றார். வண்டலூர்- மீஞ்சூர் வெளிவட்ட சாலையின், அணுகு சாலை அருகே சென்றபோது, எதிர்பாராத விதமாக தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த கார்த்திக்கை, அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.  இச்சம்பவத்தை கேட்டு ஆத்திரமடைந்த கிராம மக்கள் உருட்டுக்கட்டையால் பேருந்து கண்ணாடிகளை உடைத்து, தீயிட்டுக் கொளுத்தினர். இதில் பேருந்து முற்றிலுமாக சேதமடைந்தது. இதுகுறித்து பட்டாபிராம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  மேலும் படிக்க...கட்சித் தொடங்குவதில் நடிகர் ரஜினிகாந்த் தீவிரம்.. காட்டமாக விமர்சிக்கும் அரசியல் பிரமுகர்கள்

  விபத்தில் சிக்கிய பேருந்தை தீயிட்டு கொளுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேருந்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புப்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: