திமுக உடன் கைகோர்த்த பாமக கவுன்சிலர்...! அதிமுக தரப்பு அதிர்ச்சி

திமுக உடன் கைகோர்த்த பாமக கவுன்சிலர்...! அதிமுக தரப்பு அதிர்ச்சி

திமுக கவுன்சிலர்கள் உடன் பதவியேற்ற பாமக கவுன்சிலர் (வட்டமிடப்பட்டவர்)

 • News18
 • Last Updated :
 • Share this:
  பூந்தமல்லி ஒன்றியத்தில் வெற்றி பெற்ற திமுக ஒன்றிய கவுன்சிலர்கள் பதவி ஏற்றனர். அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த பா.ம.கவும் திமுகவுடன் கை கோர்த்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

  பூந்தமல்லி ஒன்றியத்தில் மொத்தம் 28 கிராம ஊராட்சிகளும், 15 ஒன்றிய வார்டுகளும் உள்ளது. இதில் 28 கிராம ஊராட்சிகளிலும் பெருவாரியாக திமுக ஆதரவு வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். அதேபோல் ஒன்றியத்தில் உள்ள 15 வார்டுகளில் 10 திமுகவும், 3 இடங்களில் அதிமுக மற்றும் பாமக 1, சுயேட்சை 1 இடங்களில் வெற்றி பெற்றனர்.

  10 இடங்களில் வெற்றி பெற்ற திமுக, பூந்தல்லி ஒன்றியத்தை கைப்பற்றி உள்ள நிலையில் வெற்றி பெற்ற திமுக கவுன்சிலர்கள்  10 பேர் இன்று காலை பதவி ஏற்றுக்கொண்டனர்.

  மாம்பழம் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற பத்மாவதி


  அதிமுகவிடம் இருந்த ஒன்றிய சேர்மன் பதவிகளை திமுக கைப்பற்றிய நிலையில் அதிமுக கவுன்சிலர்கள் மதியத்திற்கு மேல் பதவி ஏற்று கொள்ள முடிவு செய்தனர்.

  மேலும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த பா.ம.க ஒன்றிய கவுன்சிலர் பத்மாவதி,  அதிமுகவுடன் பதவி ஏற்று கொள்வார் என எதிர்பார்த்த நிலையில் திடீரென திமுக கவுன்சிலர்களுடன் கை கோர்த்து பா.ம.க. கவுன்சிலர் பதவி ஏற்றுக்கொண்டார்.

  அதிமுகவின் வெற்றி நிலை மாறியவுடன் பா.ம.க உடனே திமுகவுடன் கை கோர்த்துள்ளது. இந்த சம்பவம் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
  Published by:Sankar
  First published: