Home /News /tamil-nadu /

ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்தை உடனே பிறப்பிக்க வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ்

ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்தை உடனே பிறப்பிக்க வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ்

டாக்டர் ராமதாஸ்

டாக்டர் ராமதாஸ்

ஆன்லைன் சூதாட்டத்திற்கான தடை தாமதமாகும் ஒவ்வொரு நாளும் புதிய தற்கொலைகள் நிகழக்கூடும். வல்லுனர் குழு அமைக்கப்பட்ட பிறகு ஒருவர் தற்கொலை செய்து கொண்டதே இதற்கு சாட்சி என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்தை உடனே பிறப்பிக்க வேண்டும்  என தமிழக அரசை பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்  வலியுறுத்தியுள்ளார்.

    ஆன்லைன் சூதாட்டங்களில் பணத்தை இழந்து அதனால் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டம் காரணமாக உயிரை மாய்த்துகொள்ளும் சம்பவங்கள் கனிசமாக அதிகரித்துள்ளது. எனவே, ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுபெற்று வருகிறது.

    இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ்  இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில்,  தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வது குறித்து அரசுக்கு பரிந்துரைப்பதற்காக வல்லுனர் குழுவுக்கு அளிக்கப்பட்ட இருவார அவகாசம் நிறைவடைந்து விட்டது. ஆனாலும், அக்குழுவின் அறிக்கை தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்பட்டதாக இதுவரை தகவல் இல்லை!

    ஆன்லைன் சூதாட்டத்தின் தீய விளைவுகளும், அதை தடை செய்ய வேண்டியதன் தேவைகளும் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டவை தான். தடை தாமதமாகும் ஒவ்வொரு நாளும் புதிய தற்கொலைகள் நிகழக்கூடும். வல்லுனர் குழு அமைக்கப்பட்ட பிறகு ஒருவர் தற்கொலை செய்து கொண்டதே இதற்கு சாட்சி!

    இதையும் படிங்க: தமிழ்நாட்டில் நடப்பது தமிழர்களுக்கான ஆட்சியா? இல்லை! சிங்களர்களுக்கான ஆட்சியா? – சீமான் கண்டனம்


    எனவே, வல்லுனர் குழுவின் அறிக்கையைப் பெறுவதில் எந்த தாமதமும் செய்யக்கூடாது. உடனடியாக குழுவின் அறிக்கையைப் பெற்று நாளை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்திற்கு ஒப்புதல் பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Dr Ramadoss, Online rummy, PMK

    அடுத்த செய்தி