மறைமுகமாக இந்தியை திணிக்கும் செயல்: ராமதாஸ் கண்டனம்

ராமதாஸ்

இந்தியைப் பயன்படுத்தினால் தான் நாடு முன்னேறும் என்று கூறுவதில் ஏராளமான பொருள்கள் மறைந்து கிடக்கின்றன. அது தவறு, அவ்வாறு கூறக்கூடாது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  தாய்மொழியுடன் இந்தியையும் பயன்படுத்தக் கட்டாயப்
  படுத்தக் கூடாது என்றும் இது மறைமுகமாக இந்தியை திணிக்கும் செயல் என்றும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

  நாடு முழுவதும் இன்று இந்தி திவாஸ் கடைபிடிக்கப்படுகிறது. இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தாய்மொழியுடன் இந்தியையும் தங்களது தினசரி வேலையில் இந்தியர்கள் பயன்படுத்தவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.  இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,  இந்தியர்கள் அனைவரும் அலுவல் மொழியான இந்தியுடன் தாய்மொழியையும் இணைத்து பயன்படுத்துவதில் தான் நாட்டின் முன்னேற்றம் அடங்கியிருக்கிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருக்கிறார். இது மறைமுகமாக இந்தியத் திணிக்கும் செயலாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.  மேலும் #StopHindiImposition என்ற ஹேஷ்டேக்கையும் அவர் பயன்படுத்தியுள்ளார்.

  இதையும் படிங்க: இதுக்கு போய் ரூ.1.50 கோடி செலவா? கனிமொழிக்கு காயத்ரி ரகுராம் கேள்வி!


  மேலும்,  இந்தி திவாஸ் நாளில் இந்தி மொழி பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் பேசுவது தவறில்லை. ஆனால், இந்தியைப் பயன்படுத்தினால் தான் நாடு முன்னேறும் என்று கூறுவதில் ஏராளமான பொருள்கள் மறைந்து கிடக்கின்றன. அது தவறு... அவ்வாறு கூறக்கூடாது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.  தமிழ் உள்ளிட்ட எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் அலுவல் மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக கிடப்பில் கிடக்கிறது. அந்தக் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றி மொழிச்சமநிலையை மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும் என்றும் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Murugesh M
  First published: