ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கம்மி விலையில் வாட்ச் இல்லையா..? சென்னையில் கை கடிகாரம் வாங்கிய ராமதாஸ்..

கம்மி விலையில் வாட்ச் இல்லையா..? சென்னையில் கை கடிகாரம் வாங்கிய ராமதாஸ்..

ராமதாஸ்

ராமதாஸ்

இந்த கடிகாரம் நன்றாக இருக்கும் என்று கூறினார். அதை ஏற்றுக் கொண்டு அதற்கான பணத்தை செலுத்தி ரசீது வாங்கிக் கொண்டேன். அதன் பின்னர் அந்த கைக்கடிகாரத்தை கடையின் நிர்வாகி எனக்கு கட்டி விட்டார்- ராமதாஸ்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தான் புதிதாக வாங்கிய வாட்ச் தொடர்பாக ஃபேஸ்புக்கில் பதிவு வெளியிட்டுள்ளார். இது கவனம் பெற்றுள்ளது.

  மருத்துவர் ராமதாஸ் ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகிய சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். அரசியல் பதிவு தவிர்த்து தன் வாழ்வின் சுவாரஸ்சிய சம்பவங்கள் குறித்தும் அவ்வப்போது பகிர்ந்து வருகிறார். தனது முதல் அம்பாசிடர் கார் குறித்து கடந்த ஆண்டு அவர் பதிவிட்டிருந்தார். அதேபோன்று தற்போது, தான் புதிதாக வாங்கிய வாட்ச் குறித்து பதிவிட்டுள்ளார்.

  ’நான் வாங்கிய புதிய கைக்கடிகாரம்’ என்ற தலைப்பில் அவர் ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழக அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞரும், சமூகநீதி சார்ந்த பல வழக்குகளில் எனக்காக வாதிட்டவருமான மூத்த வழக்கறிஞர் ஜி. மாசிலாமணி அவர்களின் முத்துவிழா சென்னை இராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஏ.வி.எம். இராஜேஸ்வரி அரங்கத்தில் நடைபெற்றது.

  அதில் பங்கேற்ற பின்னர், எனக்கு ஒரு கைக்கடிகாரம் வாங்குவதற்காக, நிகழ்விடத்திற்கு எதிரில் அமைந்துள்ள கைக்கடிகாரக் கடைக்குச் சென்றேன்.கைக்கடிகாரங்களின் விலையை விசாரித்தேன். அந்தக் கடையின் நிர்வாகி ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள கைக்கடிக்காரத்தைக் காட்டினார். அதை விட குறைவாக ரூ.2000, ரூ.3000 விலையில் கடிகாரங்கள் இல்லையா? என்று கேட்டேன்.

  அதற்கு அவர் அந்த விலையிலும் கடிகாரங்கள் உள்ளன அய்யா.... ஆனால், இந்த கடிகாரம் நன்றாக இருக்கும் என்று கூறினார். அதை ஏற்றுக் கொண்டு அதற்கான பணத்தை செலுத்தி ரசீது வாங்கிக் கொண்டேன். அதன் பின்னர் அந்த கைக்கடிகாரத்தை கடையின் நிர்வாகி எனக்கு கட்டி விட்டார்.அதை மகிழ்ச்சியுடன் கட்டிக் கொண்டு எனது வீடு திரும்பினேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

  Published by:Murugesh M
  First published:

  Tags: Dr Ramadoss, PMK