டிசம்பர் 31-ஆம் தேதி இணைய வழியில் பா.ம.க. சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் - ஜி.கே.மணி அறிவிப்பு!

டிசம்பர் 31-ஆம் தேதி இணைய வழியில் பா.ம.க. சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் - ஜி.கே.மணி அறிவிப்பு!

ஜி.கே.மணி

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள பா.ம.க. மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகளும், பா.ம.க.வின் பல்வேறு அணிகள், துணை அமைப்புகள் ஆகியவற்றின் அனைத்து நிலை நிர்வாகிகளும், சிறப்பு அழைப்பாளர்களும் பங்கேற்பர்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  டிசம்பர் 31-ஆம் தேதி இணைய வழியில் பா.ம.க. சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என்று பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார்.

  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

  பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுக் கூட்டம், ‘‘2020ஆம் ஆண்டுக்கு விடை கொடுப்போம்; 2021-ஆம் ஆண்டை வரவேற்போம்’’ என்ற தலைப்பில் திசம்பர் 31-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

  31.12.2020 வியாழக்கிழமை காலை 11.00 மணிக்கு இணைய வழியில் நடைபெறவுள்ள புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா, பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகிப்பார்கள்.

  கட்சித் தலைவர் ஜி.கே. மணி தலைமையேற்கிறார். கட்சியின் பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன், பொருளாளர் திலகபாமா ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர். இக்கூட்டத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள பா.ம.க. மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகளும், பா.ம.க.வின் பல்வேறு அணிகள், துணை அமைப்புகள் ஆகியவற்றின் அனைத்து நிலை நிர்வாகிகளும், சிறப்பு அழைப்பாளர்களும் பங்கேற்பர்.

  Also read... 2021ம் ஆண்டுக்கான தமிழக அரசு மற்றும் அஞ்சல் துறை விடுமுறை நாட்கள் அறிவிப்பு!

  இந்தக் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களுடன் மருத்துவர் அய்யா அவர்கள் புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக் கொள்வார். 2020-ஆம் ஆண்டில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்ட கட்சி மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்படுவதுடன், 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ம.க. மேற்கொள்ளவிருக்கும் நிலைப்பாடு குறித்து சிறப்புப் பொதுக்குழு கூட்டத்தில் விரிவாக விவாதித்து முடிவெடுக்கப்படவுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Vinothini Aandisamy
  First published: