மாம்பழத்தை கொடுத்து பிரச்சாரம் செய்த பாமக வேட்பாளர் : பசியால் பழத்தையே உணவாக சாப்பிட்ட தொண்டர்

மாம்பழத்தை கொடுத்து பிரச்சாரம் செய்த பாமக வேட்பாளர் : பசியால் பழத்தையே உணவாக சாப்பிட்ட தொண்டர்

மாம்பழம் கொடுத்து பிரச்சாரம்

இரண்டு மசூதிகளில் தொழுகை முடித்துவிட்டு வந்த இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரிப்பு.

 • Share this:
  பூந்தமல்லி பாமக வேட்பாளர் துண்டு பிரசுரம் இல்லாததால், இஸ்லாமியர்களிடம் மாம்பழத்தை கொடுத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அப்போது நேரம் அதிகமானதால் வாக்கு சேகரிக்க கொண்டு வந்திருந்த மாம்பழத்தை தொண்டர் ஒருவர் ருசித்து சாப்பிட்டார்.

  பூந்தமல்லி தனி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் ராஜமன்னார் போட்டியிடுகிறார். இந்நிலையில்,  பூந்தமல்லி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள மசூதிகளில் தொழுகை முடித்துவிட்டு வெளியே வந்த இஸ்லாமியர்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

  அப்போது, துண்டுபிரசுரம் கைகளில் ஏதும் இல்லாததால் பாமக சின்னமான மாம்பழத்தை கையில் வைத்துக் கொண்டு தொழுகை முடித்து விட்டு சென்ற இஸ்லாமியர்கள் ஒவ்வொருவரிடமும் மாம்பழத்தை கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

  இரண்டு மசூதிகளில் தொழுகை முடித்துவிட்டு வந்த இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு மதிய உணவுக்கு தாமதமானதால் வாக்கு சேகரிக்க வந்த தொண்டர் ஒருவர் பசி தாங்க முடியாமல் மாம்பழத்தை மர நிழலில் நின்று ரசித்து ருசித்து சாப்பிட்டார்.

  Must Read :  வேட்பாளர் வெற்றி பெற்றவுடன் எனக்கு 3 கூடை மாம்பழம் தர வேண்டும் - கலகலப்பாக ராமதாஸ் பிரச்சாரம்

   

  பாமக சார்பில் வேட்பாளர் திடீரென்று அறிவிக்கப்பட்டதால் இதுவரை துண்டுபிரசுரங்கள் ஏதும் அச்சு அடிக்கப்படவில்லை என உடனிருந்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Suresh V
  First published: