மாங்காய்க்கு மஞ்சள் நிற பெயிண்ட் அடித்து மாம்பழமாக காட்டி வாக்கு சேகரித்த பா.ம.க வேட்பாளர்

மாங்காய்க்கு மஞ்சள் நிற பெயிண்ட் அடித்து மாம்பழமாக காட்டி வாக்கு சேகரித்த பா.ம.க வேட்பாளர்

மாங்காய் சின்னம்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் மாங்காய் பழுக்காததால் மஞ்சள் பெயிண்ட் அடித்து பா.ம.க வேட்பாளர் பிரகாஷ் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

 • Share this:
  தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. அதனைமுன்னிட்டு தமிழக அரசியல் கட்சித் தலைவர்களும் வேட்பாளர்களும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்காளர்களைக் கவர்வதற்காக வேட்பாளர்கள் வித்தியாச, வித்தியாசமாக வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். துணி துவைப்பது, தோசை சுடுவது, பேண்ட் வாசிப்பது மக்களுடன் மக்களாக நெருங்கி வேட்பாளர்கள் வாக்குச் சேகரித்துவருகின்றனர்.

  இந்தநிலையில், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதியில் அ.தி.மு.க கூட்டணி சார்பில் பா.ம.க கட்சியைச் சேர்ந்த பிரகாஷ் வேட்பாளராக நிற்கிறார். அவர், இன்று சுண்ணாம்புகுளம் பகுதியில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்ட சின்னமான மாம்பழ சின்னத்தை பொதுமக்களிடம் காண்பிக்கும் விதத்தில் அவரின் ஆதரவாளர்கள் மாங்காயை வைத்து வாக்குச் சேகரித்தனர்.

  மாங்காய் பச்சை நிறத்தில் இருந்ததால் அதன்மேல் மஞ்சள் கலர் பெயிண்ட் அடித்து மக்களிடையே மாம்பழம் போல் காட்டி பிரச்சாரம் செய்தனர். மாம்பழ சீசனுக்கு இன்னும் நாட்கள் உள்ள நிலையில் அதற்குள் மாம்பழம் பழுத்து விட்டதா என கிராமத்தினர் வியப்புடன் பார்த்தனர்.

  செய்தியாளர்: பார்த்தசாரதி


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: