• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • படுகொலை செய்யப்பட்ட தேவமணியின் உடலை வாங்க மறுத்து 2,000க்கும் மேற்பட்ட பாமகவினர் போராட்டம்!

படுகொலை செய்யப்பட்ட தேவமணியின் உடலை வாங்க மறுத்து 2,000க்கும் மேற்பட்ட பாமகவினர் போராட்டம்!

படுகொலை செய்யப்பட்ட தேவமணியின் உடலை வாங்க மறுத்து 2,000க்கும் மேற்பட்ட பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு!

படுகொலை செய்யப்பட்ட தேவமணியின் உடலை வாங்க மறுத்து 2,000க்கும் மேற்பட்ட பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு!

படுகொலை செய்யப்பட்ட பாமக செயலாளர் தேவமணியின் உடலை வாங்க மறுத்து 2,000க்கும் மேற்பட்ட பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

  • Share this:
காரைக்காலில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட பாமக மாவட்ட செயலாளர் தேவமணி உடலை வாங்க மறுத்து காரைக்கால் மருத்துவமனை முன்பு அக்கட்சியினர் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு பகுதியை சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் காரைக்கால் மாவட்ட செயலாளர் தேவமணி என்பவர் நேற்று இரவு தனது ஆதரவாளர் உடன் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு செல்லும் வழியில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனால் காரைக்கால் மாவட்டத்தில் பதட்டமான சூழ்நிலை நிலவியது.

மேலும் கொலையாளிகளை கைது செய்யக்கோரி படுகொலை செய்யப்பட்ட தேவமணியின் உடலை வாங்க மறுத்து காரைக்கால் அரசு மருத்துவமனை முன்பு 2000க்கும் மேற்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காரைக்கால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீர வல்லவன் துணை ஆட்சியர் ஆதர்ஷ் ஆகியோர் போராட்டக்காரர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது தேவமணி கொலை வழக்கில் அவருடைய இடப் பிரச்சனையில் சம்பந்தப்பட்டுள்ள திருநள்ளாறு பகுதியை சேர்ந்த மணிமாறன் என்பவரும் மற்றொரு குற்றவாளியும் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், கொலையாளிகளை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு  வருவதாக காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து, தேவமணி உடலை வாங்க அவரது ஆதரவாளர்கள் சம்மதித்தனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Esakki Raja
First published: