• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தி.மு.க எம்.பிக்கு சொந்தமான ஆலையில் பா.ம.க நிர்வாகி மர்ம மரணம் அடைந்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றம்

தி.மு.க எம்.பிக்கு சொந்தமான ஆலையில் பா.ம.க நிர்வாகி மர்ம மரணம் அடைந்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றம்

மரணமடைந்த பா.ம.க நிர்வாகி

மரணமடைந்த பா.ம.க நிர்வாகி

கடலூர் மாவட்டத்தில் திமுக எம்பிக்கு சொந்தமான முந்திரி ஆலையில், தொழிலாளி ஒருவர் மர்ம மரணம் அடைந்த வழக்கை, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

  • Share this:
    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மேல்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பாமக நிர்வாகி கோவிந்தராஜ். இவர் திமுக எம்பி ரமேஷுக்கு சொந்தமாக பண்ருட்டி அருகில் பணிக்கன் குப்பம் என்ற இடத்தில் உள்ள முந்திரி ஆலையில், கடந்த 5 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வந்தார்.

    செப்டம்பர் 19ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வேலைக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. அதேநேரம், அவர் இறந்து போய் விட்டதாக குடும்பத்தினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. பண்ருட்டி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த சடலத்தை குடும்பத்தினர் பார்த்தபோது அதில், பல இடங்களில் காயங்கள் இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து கோவிந்தராஜ் கொலை செய்யப்பட்டதாக குற்றம்சாட்டி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் பாமகவும் களம் இறங்கியதால், போலீசார், திமுக எம்பி ரமேஷ் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

    இதற்கிடையே இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க கோரி, பாமக வழக்கறிஞர் கே.பாலு, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். உயர்நீதிமன்ற உத்தரவின்படி, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில், செப்டம்பர் 23ம் தேதி கோவிந்தராஜ் சடலத்திற்கு உடற்கூறாய்வு நடந்தததது.

    இந்த நிலையில், கடலூர் காவல்துறையினர் தமிழக டிஜிபிக்கு கோவிந்தராஜ் மரணம் தொடர்பாக ஓர் அறிக்கை அளித்திருந்தனர்.

    அதன்பேரில், தமிழக டிஜிபி சைலேந்திரபாபு ஆலோசனை நடத்தி கோவிந்தராஜ் மரண வழக்கை, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டுள்ளார். சிபிசிஐடி விசாரணையில் கோவிந்தராஜின் மரணத்தின் பின்னணி தெரியவருமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: