தயாநிதி மாறன் வாகனத்தின் மீது பாமக-வினர் கல்வீசி தாக்கியதால் பரபரப்பு... (வீடியோ)

Youtube Video

சேலம் மாவட்டத்தில் தயாநிதி மாறன் வாகனத்தின் மீது பாமக-வினர் கல்வீசி தாக்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

 • Share this:
  சேலம் மாவட்டத்தில் திமுக எம்.பி., தயாநிதி மாறனுடன் சென்ற வாகனத்தை நோக்கி பாமக-வினர் கல்வீசி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

  சேலம் கருக்கல்வாடியில் "விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்" என்ற நிகழ்ச்சியின் பங்கேற்ற தயாநிதி மாறன், கடந்த தேர்தலில் சீட் ஒதுக்கீடுக்காக கூட்டணிக் கட்சியிடம் பாமக தலைமை 400 கோடி பெற்றதாக குற்றம்சாட்டினார். இந்நிலையில், ஓமலூர் சென்ற தயாநிதிக்கு, பாமக-வினர் கருப்புக் கொடி காட்டினர். அப்போது, நடந்த கல்வீச்சில் தயாநிதி வாகனத்துக்கு பின்னால் வந்த காரின் முகப்பு விளக்கு உடைந்தது.

  இதற்கிடையில்,சேலம் மாமாங்கம் பகுதியில் தயாநிதி தங்கும் ஓட்டல் எதிரே ஏராளமான பாமகவினர் குவிந்தனர். இதையறிந்து, திமுகவினரும் அங்கு கூடியதால் அசம்பாவிதத்தை தவிர்க்கும் நோக்கில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

  தொண்டரை தள்ளிவிட்ட அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்: இணையத்தில் வைரலாகும் வீடியோ

  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: