• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தனித்துப் போட்டி என பாமக ஏற்கனவே அறிவித்த நிலையில், அதிமுகவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை..

தனித்துப் போட்டி என பாமக ஏற்கனவே அறிவித்த நிலையில், அதிமுகவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை..

தனித்துப் போட்டி என பாமக ஏற்கனவே அறிவித்த நிலையில் அதிமுகவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை..

தனித்துப் போட்டி என பாமக ஏற்கனவே அறிவித்த நிலையில் அதிமுகவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை..

தனித்துப் போட்டி என பாமக ஏற்கனவே அறிவித்த நிலையில் அதிமுகவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

  • Share this:
அதிமுக, திமுகவுக்கு 3 சதவிகிதம் மட்டுமே வாக்கு வித்தியாசம்,  எனவே திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்றால் பலமான கூட்டணி வேண்டும். அந்த வகையில், பாமக வந்தால் மகிழ்ச்சி
ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுகவை தோற்கடிக்க பலமான கூட்டணி அமைய வேண்டும். இதற்கு பாமக மீண்டும் கூட்டணிக்கு வந்தால் மகிழ்ச்சி என கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.

புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான, இடங்கள் பகிர்வு குறித்து, அதிமுக தரப்பில் முன்னாள் அமைச்சர் தங்கமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன், பாஜக தரப்பில் பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், கராத்தே தியாகராஜன் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர் வேத சுப்பிரமணியன் செங்கல்பட்டு மாவட்ட தலைவர் பலராமன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இன்று செங்கல்பட்டு மாவட்டத்தை பொறுத்தவரை 16 மவட்ட கவுன்சிலர்கள், 156 ஒன்றிய கவுன்சிலர்களுக்கான போட்டி நடைபெற உள்ளது. இதற்கான ஆலோசனை தேர்தல் பொறுப்பாளர்களுடன் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை 2மணி நேரம் நடைபெற்றது. மீண்டும் பேச்சுவார்த்தை 5மணிக்கு நடைபெறும் என கூறியுள்ளனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைமை கட்சியாக உள்ள அதிமுகவுடன் பாஜக கூட்டணியோடு செயல்படுவோம் என தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இந்த நிலையில் கூட்டணி இடங்கள் குறித்து தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் தேர்தல் பொறுப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

Also read: உள்ளாட்சியில் வாரோம், நல்லாட்சி தாரோம்.. மதுரையில் போஸ்டர் ஒட்டி விஜய் ரசிகர்கள் அதகளம்!

பாஜக சார்பில் மாவட்டத்திற்கு 2 பார்வையாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திற்கு பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், மற்றும் கராத்தே தியாகராஜன் ஆகியோரை நியமித்தது, இதனை தொடர்ந்து, பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் பெஞ்சமின், காமராஜ் ஆகியோருடன் பாஜக தரப்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர் என்று கூறினார்.

பின்னர் தனித்து போட்டி என அறிவித்த பாமக, அதிமுக கூட்டணியில் போட்டியிட விருப்பும் தெரிவித்து பட்டியலை வழங்கியுள்ளனர். மாவட்டத்திற்கு மாவட்டம் பாமகவின் நிலைபாடு மாறுகிறது. கூட்டணியை பொறுத்தவரை திமுகவை தோற்கடிக்க வேண்டும்.

இதற்கு மீண்டும் கூட்டணிக்கு பாமக வந்தால் மகிழ்ச்சி.
சட்டமன்ற தேர்தலில் அதிமுக திமுகவுக்கு 3சதவிகிதம் மட்டுமே வாக்கு வித்தியாசம்,  எனவே திமுக தோற்கடிக்க வேண்டும் என்றால் பலமான கூட்டணி வேண்டும். அந்த வகையில் பாமக வந்தால் மகிழ்ச்சி என பாஜக பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Esakki Raja
First published: