அ.தி.மு.க கூட்டணியில் போட்டியிடும் ஐந்து மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பா.ம.க வெளியிட்டது.
அ.தி.மு.க மற்றும் தி.மு.க ஆகிய கட்சிகள் தொகுதி ஒதுக்கீட்டை இன்று நிறைவு செய்தன. அதனைத் தொடர்ந்து தி.மு.க மற்றும் அ.தி.மு.க அடுத்தடுத்து வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டன.
தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய கட்சிகள் 20 மக்களவைத் தொகுதிகளிலும் 18 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடுகின்றனர். இரு கட்சிகளும் மொத்த தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அறிவித்தன. அதனைத் தொடர்ந்து அ.தி.மு.க கூட்டணியில் ஏழு தொகுதிகளில் போட்டியிடும் பா.ம.க, ஐந்து தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்துள்ளது.
மக்களவைத் தொகுதிகள்:
தருமபுரி - அன்புமணி
விழுப்புரம் -வடிவேல் ராவணன்
அரக்கோணம் - ஏ.கே.மூர்த்தி
மத்திய சென்னை - சாம்பால்
கடலூர் - கோவிந்தசாமி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Dharmapuri S22p10, North Central Tamil Nadu Lok Sabha Elections 2019, Tamil Nadu Lok Sabha Elections 2019