மாநிலங்களவைத் தேர்தல்: பாமக சார்பில் அன்புமணி போட்டி!

News18 Tamil
Updated: July 6, 2019, 8:26 PM IST
மாநிலங்களவைத் தேர்தல்: பாமக சார்பில் அன்புமணி போட்டி!
அன்புமணி ராமதாஸ்
News18 Tamil
Updated: July 6, 2019, 8:26 PM IST
மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் அதிமுகவைச் சேர்ந்த 2 பேரும், பாமக சார்பில் அன்புமணியும் போட்டியிட உள்ளனர்.

மாநிலங்களவை தமிழக எம்பிக்கள் 6 பேரின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவடைகிறது. இதையடுத்து புதிதாக 6 எம்பிக்களைத் தேர்வு செய்ய வருகிற 18-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

மாநிலங்களவை எம்பிக்களை தமிழக சட்டசபை எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்து தேர்வு செய்யவுள்ளார்கள். எம்எல்ஏக்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் கணக்கிட்டால், அதிமுக கூட்டணி சார்பில் 3 எம்பிக்களையும், திமுக கூட்டணி சார்பில் 3 எம்பிக்களையும் தேர்வு செய்யலாம்.

மாநிலங்களவையில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் யார்யார் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்தனர். அதிமுக வேட்பாளர்களாக முகமது ஜான், சந்திரசேகரன் ஆகியோரது பெயர்கள் அறிவிக்கப்பட்டன.

அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு வழங்கப்பட்டுள்ள ஓர் இடத்தில் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுகிறார் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார். அதிமுக வேட்பாளர்கள் முகமது ஜான், சந்திரசேகரன் மற்றும் பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் திங்கட்கிழமை மனுதாக்கல் செய்யவுள்ளனர்.
First published: July 6, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...