ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ரயிலில் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை மீண்டும் வழங்குக - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

ரயிலில் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை மீண்டும் வழங்குக - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

ரயில் கட்டண சலுகை

ரயில் கட்டண சலுகை

மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையை வசதி படைத்தவர்கள் பயன்படுத்துவதில்லை. ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு இந்தக் கட்டண சலுகை மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மூத்த குடிமக்களுக்கு பயனளிக்கும் கட்டண சலுகையை நிறுத்தி வைப்பது நியாயமல்ல!

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  ரயில்களில்  மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

  நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக இயல்மான ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. பெரியோர்களுக்கான கட்டண சலுகை போன்றவை இந்த ரயில்களில் கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டது.  தொற்று பரவல் குறைந்ததையடுத்து சிறப்பு ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.

  மீண்டும் பழைய ரயில் சேவை தொடங்கியபோதிலும், முதியோர்களுக்கான கட்டண சலுகை போன்றவை வழங்கப்படாமல் உள்ளது. இது தொடர்பாக பாமக இளைஞரணி செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இந்தியாவில் அனைத்து ரயில்களும் கொரோனா பரவலுக்கு முந்தைய கால அட்டவணைப்படி இயங்கத் தொடங்கி விட்டன. ஆனால், கொரோனா கட்டுப்பாடுகளை காரணம் காட்டி நிறுத்தி வைக்கப்பட்ட மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை மீண்டும் வழங்கப்படாதது வருத்தமளிக்கிறது.

  மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையை வசதி படைத்தவர்கள் பயன்படுத்துவதில்லை. ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு இந்தக் கட்டண சலுகை மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மூத்த குடிமக்களுக்கு பயனளிக்கும் கட்டண சலுகையை நிறுத்தி வைப்பது நியாயமல்ல!

  இதையும் படிங்க: மீண்டும் ஆட்சிக்கு வருவோம்... ஓய்வு பெற்றாலும் விடமாட்டோம்: மேடையிலேயே போலீஸை மிரட்டிய அதிமுக எம்.எல்.ஏ.

  மூத்த குடிமக்களுக்கு வருவாய் ஆதாரம் இல்லை. அவர்களில் பலர் கட்டண சலுகைக்காகவே ரயில்களில் பயணிக்கிறார்கள். இவற்றைக் கருத்தில் கொண்டு மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையை மீண்டும் வழங்க ரயில்வே வாரியம் முன்வர வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார்.

  Published by:Murugesh M
  First published:

  Tags: Anbumani ramadoss, Indian Railways