பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்கவேண்டும் - மத்திய, மாநில அரசுகளுக்கு அன்புமணி வலியுறுத்தல்!

அன்புமணி ராமதாஸ்

பெட்ரோல்,டீசல் விலையை முறையே 5 மற்றும் 4 ரூபாய் குறைப்பதாக திமுக அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்றும் அன்புமணி சாடியுள்ளார்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  மக்கள் நலன் கருதி, பெட்ரோல், டீசல் மீதான வரிகளை மத்திய,மாநில அரசுகள் தலா 10 ரூபாய் என மொத்தம் 20 ரூபாய் லிட்டருக்கு குறைக்கவேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், தமிழ்நாட்டில் பெட்ரோல் விலை ரூ100-ஐத் தொட்டுள்ளது. கொடைக்கானலில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.99.95க்கு விற்கப்படுகிறது. சென்னையில் ஒரு லிட்டர் டீசல் ரூ.91.64 ஆக உயர்ந்திருக்கிறது. இந்த விலை உயர்வு மக்களைக் கடுமையாக பாதிக்கும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மேலும், கலால் வரியாக ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 32.90 ரூபாயும், டீசலுக்கு 31.80 ரூபாயும் மத்திய அரசு வசூலிப்பது தான் விலை உயர்வுக்கு காரணம். தமிழக அரசின் வரியையும் சேர்த்து ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.58.28, டீசலுக்கு ரூ.50.13 வரியாக வசூலிக்கப்படுகிறது. இது நியாயமல்ல என்றும் தெரிவித்துள்ளார்.  அதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் மாநில அரசின் மதிப்புக் கூட்டு வரியாக பெட்ரோலுக்கு ரூ.25.38 (34%), டீசலுக்கு ரூ.18.33 (25%) வசூலிக்கப்படுகிறது. மத்திய அரசு வரியில் மாநில அரசின் பங்கையும் சேர்த்து தமிழக அரசுக்கு முறையே ரூ.39.19, ரூ.31.68 வருமானமாக கிடைக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

  Also read... மறுபடியும் கேட்கிறேன்... மதுக்கடைகளை திறக்காதீர்... நிரந்தரமாக மூடுங்கள் - ராமதாஸ் கோரிக்கை!

  மேலும், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5, டீசல் விலை ரூ.4 குறைக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை திமுக அரசு இதுவரை நிறைவேற்றவில்லை. மக்கள் நலன் கருதி பெட்ரோல், டீசல் மீதான வரிகளை மத்திய, மாநில அரசுகள் தலா ரூ.10 வீதம் மொத்தம் ரூ.20 குறைக்க முன்வர வேண்டும் என்றும் ராமதாஸ் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Vinothini Aandisamy
  First published: