பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ், முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற பதவி வெறி தனக்கு இல்லையென்றும் அதேவேளையில் தமிழகத்தை பாமக ஆள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்,''2021-ஆம் ஆண்டுக்கு விடை கொடுப்போம்;2022-ஆம் ஆண்டை வரவேற்போம்'' என்ற தலைப்பில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி, 40 ஆண்டுகால உழைப்பால் பாமக ஆலமரமாய் உயர்ந்து நிற்கிறது. 40 ஆண்டுகால உழைப்பை இன்னும் நான்கு ஆண்டுகளில் நாம் எட்டிப்பிடிக்க வேண்டும். 2026 ல் பாமக ஆட்சியைப் பிடிக்கும் என்ற நம்பிக்கை இராமதாஸ்க்கு உள்ளது. அதற்காக நான் கடுமையாக உழைப்போம்” என்று பேசினார்.
அவரை தொடர்ந்து பேசிய, இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், முதலமைச்சராக வரவேண்டுமென பதவி வெறி இல்லை ஆனால் தமிழகத்தை பாமக ஆள வேண்டும். வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டை நிச்சயம் அடைவோம் ;அமைதியாக இருக்கிறோம் என்று நினைத்துக்கொள்ளாதீர்கள் செய்ய வேண்டியதை செய்து கொண்டிருக்கிறோம். காரியமா வீரியமா என்றால் இன்றையச் சூழலில் காரியம் தான் முக்கியம்.
கட்சி தொடங்கிய 18ஆண்டுகளில் திமுக ஆட்சிக்கு வந்தது ;தொடங்கப்பட்ட 5 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியைப் பிடித்தது. பாமக தொடங்கி 32 ஆண்டுகள் ஆகியும் நம்மால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. இனியும் இப்படியே இருந்து விடமுடியாது.
இதையும் படிங்க: நகைக் கடன் தள்ளுபடி: திமுக அரசு மக்களை ஏமாற்றுகிறது - அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்
2016 ல் நாம் ஆள வேண்டுமென கேட்டோம். 2019, 2021 ல் அவர்கள் ஆள வேண்டுமென கேட்டோம் 2026. ல் நாம் ஆள வேண்டுமென கேட்போம்.எடப்பாடி மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. நான்காண்டுகள் எளிமையான முதல்வராக இருந்தார்.பல்வேறு எதிர்ப்புகளை மீறி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்தார். 42 ஆண்டுகால போராட்டத்தால் கிடைத்த இடஒதுக்கீட்டுக்கு சப்பை காரணம் சொல்லி உயர்நீதிமன்றம் தடுத்தது. இதைவிட மோசமான வார்த்தைகளை பேச எனக்கு தெரியும்.
மேலும் படிங்க: கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி: இத்தனை லட்சம் பேருக்கு தகுதியில்லை என தமிழக அரசு அறிவிப்பு
அடுத்த முறை மக்கள் திமுகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் நமக்கு மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது. தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்பதில் பாமக உறுதியாக உள்ளது. ஆனால் திமுக அதிமுக இரு கட்சிகளுக்கும் குழப்பம் நீடிக்கிறது என்று பேசினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.