Home /News /tamil-nadu /

வேறு மாநிலத் தொழிலாளிகளின் எண்ணிக்கையை பிரதமர் அலுவலகம் கவனித்திருக்க வேண்டும் - ரவிக்குமார் எம்.பி.,

வேறு மாநிலத் தொழிலாளிகளின் எண்ணிக்கையை பிரதமர் அலுவலகம் கவனித்திருக்க வேண்டும் - ரவிக்குமார் எம்.பி.,

ரவிக்குமார், எம்.பி.

ரவிக்குமார், எம்.பி.

உத்தரப் பிரதேசமும் பீகாரும்தான் அதிக எண்ணிக்கையிலான தொழிலாளிகளை பிற மாநிலங்களுக்கு அனுப்புகின்றன.

    மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் தொழிலாளிகள் எவ்வளவுபேர் என்பதை பிரதமர் அலுவலகம் பார்த்திருக்க வேண்டும் என ரவிக்குமார் எம்.பி கூறியுள்ளார்.

    அவருடைய ட்விட்டர் பதிவில், “21 நாள் ஊரடங்கை அறிவிப்பதற்கு முன், இந்தியாவில் மாநிலம் விட்டு மாநிலம் சென்று வேலை செய்யும் தொழிலாளர்கள் எவ்வளவு பேர் என்பதை பிரதமர் அலுவலகம் பார்த்திருக்க வேண்டும். 2011 சென்சஸில் சுமார் 5.6 கோடி பேர் அப்படி வகைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் வேலை தேடி மாநிலம் விட்டு மாநிலம் செல்வோர் 30%. அதாவது சுமார் 1.9 கோடி. அதில் டெல்லியில் மட்டும் சுமார் 1 கோடி தொழிலாளர்கள் உள்ளனர்.

    உத்தரப் பிரதேசமும் பீகாரும்தான் அதிக எண்ணிக்கையிலான தொழிலாளிகளை பிற மாநிலங்களுக்கு அனுப்புகின்றன. இந்த புள்ளி விவரங்களை பிரதமர் அறிந்திருந்தால் அந்தத் தொழிலாளிகளுக்கு எந்தவொரு ஏற்பாட்டையும் திட்டமிடாமல் 21 நாள் ஊரடங்கை அறிவித்திருக்கமாட்டார்” என்று தெரிவித்துள்ளார்.

    Also see:
    Published by:Rizwan
    First published:

    Tags: PM Narendra Modi, VCK, Villupuram MP Ravikumar

    அடுத்த செய்தி