பிரதமர் மோடி முதன்முறையாக மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சுவாமி தரிசனம்!

பிரதமர் மோடி முதன்முறையாக மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சுவாமி தரிசனம்!

பிரதமர் மோடி

உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பிரதமர் மோடி முதல் முறையாக சுவாமி தரிசனம் செய்தார்.

  • Share this:
நாளை மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பாஜக - அதிமுக கூட்டணியின் 36 வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பதற்காக மதுரை வந்துள்ள பிரதமர் மோடி மீனாட்சியம்மன் கோவிலில் பள்ளியறை பூஜையில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். தமிழரின் பாரம்பரிய உடையான வேஷ்டி, சட்டை, அங்கவஸ்திரம் அணிந்து சுவாமி தரிசணத்திற்காக பிரதமர் மோடி வந்தார்.

கிழக்கு கோபுரம் அருகே உள்ள அம்மன் சன்னதி வழியாக உள்ளே சென்ற  பிரதமர் மோடிக்கு கோவில் நிர்வாகம் சார்பாக பூரண கும்ப மரியாதை செய்யப்பட்டது.

மதுரையில் பிரதமர் மோடி


முன்னதாக கோவில் வளாகம் முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்பில் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.மாலை 7 மணி முதல் 4 கோபுர வாசல் வழியாக பக்தர்கள் அனுமதி நிறுத்தம் செய்யப்பட்டது.

முன்னதாக மேற்குவங்கத்தில் இருந்து தனி விமானத்தில் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் மோடி. அங்கிருந்து கார் மூலம் மீனாட்சி அம்மன் கோவில் வந்தடைந்தார். பிரதமரின் வருகையை அடுத்து மதுரை முழுவதும் சுமார் 3,000 போலீசார் காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Published by:Arun
First published: