Latest News Live updates: மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் வீட்டில் வருமானவரி சோதனை
தமிழ்நாடு , புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் சட்டமன்ற தேர்தல் (Assembly election 2021 ) இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தேர்தல் கள செய்திகள், கொரோனா பரவல் (CoronaVirus), தடுப்பூசி (Corona vaccine ) உள்ளிட்ட அப்டேட்கள், மாவட்டங்களில் நடக்கும் நிகழ்வுகள் தேர்தல் பிரசாரங்கள், தேசிய, உலக நிகழ்வுகள் உள்ளிட்ட அனைத்தையும் உடனுக்குடன் இங்கே அறியலாம்.
அமைச்சர் சிவி.சண்முகம் மீது வழக்கு பதிவு. நேற்று விழுப்புரம் வண்டி மேடு பகுதியில் அமைச்சர் சிவி.சண்முகம் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார் அப்போது அமைச்சருக்கு ஆரத்தி எடுத்தவர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில் இதுகுறித்து விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
16:3 (IST)
சிவகாசி பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் நெருங்கிய நண்பர் சீனிவாசன் இல்லத்தில் வருமானவரித் துறையினர் திடீர் சோதனை
திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என் அண்ணாதுரை வீட்டில் நடைபெற்று வந்த வருமானவரி சோதனை 3 மணி நேரத்திற்குப் பிறகு நிறைவடைந்தது. சோதனையில் எந்த ஆவணங்களும் சிக்க வில்லை என வருமான வரித்துறையினர் தகவல்.
கண்ணகி நகரில் பணம் பட்டுவாடா செய்த அதிமுக-வினரை கையும் களவுமாக பிடித்து போலீசிடம் ஒப்படைத்த திமுக-வினர்
15:3 (IST)
சென்னை சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட கண்ணகிநகர் பகுதியில் அதிமுகவினர் பணம் பட்டுவாடா செய்தபோது திமுகவினர் கையும் களவுமாக பிடித்து கண்ணகிநகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
14:57 (IST)
பிரியங்கா காந்தியின் தமிழக வருகை ரத்து
கணவருக்கு கொரோனா உறுதியானதையடுத்து தன்னை தனிமை படுத்தி கொண்டிருப்பதால் பிரியங்கா காந்தியின் தமிழக வருகை ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு
சிலியில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் தனது சர்வதேச எல்லையை மூடுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியில் கொரோனாவின் இரண்டாம் அலை வீச தொடங்கியுள்ளது.
தமிழ்நாடு , புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் சட்டமன்ற தேர்தல் (Assembly election 2021 ) இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தேர்தல் கள செய்திகள், கொரோனா பரவல் (CoronaVirus), தடுப்பூசி (Corona vaccine ) உள்ளிட்ட அப்டேட்கள், மாவட்டங்களில் நடக்கும் நிகழ்வுகள் தேர்தல் பிரசாரங்கள், தேசிய, உலக நிகழ்வுகள் , உள்ளிட்ட அனைத்தையும் உடனுக்குடன் இங்கே அறியலாம்.