''தமிழகத்தில் கூட்டணிக்கான கதவுகள் திறந்தே உள்ளன'' - பிரதமர் மோடி!

பிரதமருடன் கலந்துரையாடிய நிர்வாகிகள், தமிழகத்தில் திமுக அல்லது ரஜினிகாந்த் அல்லது அதிமுக-வுடன் பாஜக கூட்டணி அமைக்கும் என்று யூகங்கள் கிளம்புவதாகவும், இதில், யாருடன் கூட்டணி என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

Web Desk | news18
Updated: January 10, 2019, 10:33 PM IST
''தமிழகத்தில் கூட்டணிக்கான கதவுகள் திறந்தே உள்ளன'' - பிரதமர் மோடி!
பிரதமர் நரேந்திர மோடி
Web Desk | news18
Updated: January 10, 2019, 10:33 PM IST
நாடாளுமன்றத் தேர்தலுக்காக பாஜக-வின் கூட்டணிக் கதவுகள், தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளுக்கும் திறந்தே இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், தமிழகத்தில் அரக்கோணம், கிருஷ்ணகிரி, ஈரோடு, கடலூர், தர்மபுரி தொகுதிகளைச் சேர்ந்த வாக்குச்சாவடி மட்டத்திலான பாஜக நிர்வாகிகளுடன் காணொலிக்காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி இன்று கலந்துரையாடினார்.

அப்போது, தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்த பிரதமர், இந்த பண்டிகை மக்களுக்கு மகிழ்ச்சியையும், சிறந்த ஆரோக்கியத்தையும் கொண்டுவரட்டும் என்று கேட்டுக் கொண்டார்.

பிரதமருடன் கலந்துரையாடிய நிர்வாகிகள், தமிழகத்தில் திமுக அல்லது ரஜினிகாந்த் அல்லது அதிமுக-வுடன் பாஜக கூட்டணி அமைக்கும் என்று யூகங்கள் கிளம்புவதாகவும், இதில், யாருடன் கூட்டணி என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

இதற்குப் பதிலளித்த பிரதமர், 20 ஆண்டுகளுக்கு முன்பே, இந்திய அரசியலில் வெற்றிகரமான கூட்டணி அரசியலை அடல் பிகாரி வாஜ்பாய் ஏற்படுத்தியதாக அவர் கூறினார். கூட்டணியைப் பொருத்தவரை, பழைய நண்பர்களை வரவேற்பதாகவும், அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் கதவுகள் திறந்தே இருப்பதாகவும் நரேந்திர மோடி தெரிவித்தார்.

Also see...

First published: January 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...