Home /News /tamil-nadu /

இந்தியாவை மதுரைவீரன், அய்யனார் போல் பிரதமர் மோடி காக்கிறார் - அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன்

இந்தியாவை மதுரைவீரன், அய்யனார் போல் பிரதமர் மோடி காக்கிறார் - அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன்

நவநீதகிருஷ்ணன்

நவநீதகிருஷ்ணன்

நம்முடைய கிராமங்களில் தொற்று வராமல் தடுப்பதற்காக மதுரைவீரன் அய்யனார் சிலைகளை வைத்து இருக்கிறோம் இந்தியாவில் தொற்று வராமல் தடுக்க நம்முடைய பிரதமர் பாடுபட்டு வருகிறார் என்று அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் பேசினார்.

    இந்தியாவை மதுரைவீரன், அய்யனார் போல் பிரதமர் நரேந்திர மோடி காப்பதாக  நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன் பேசினார்.

    நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இன்றைய தினம் ஓமைக்ரான் தொற்று குறித்த விவாதம் மாநிலங்களவையில் நடைபெற்றது. அப்போது, தடுப்பூசி போடும் பணியை பெரும் முயற்சியாக மேற்கொள்ள மத்திய மாநில அரசுகளுக்கு பாராட்டு தெரிவிப்பதாக தமிழ் மாநில காங்கிரஸ் உறுப்பினர் ஜி கே வாசன் தெரிவித்தார்.

    பின்னர் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் நவநீத கிருஷ்ணன் பேசுகையில், நம்முடைய கிராமங்களில் தொற்று வராமல் தடுப்பதற்காக மதுரைவீரன் அய்யனார் சிலைகளை வைத்து இருக்கிறோம் இந்தியாவில் தொற்று வராமல் தடுக்க நம்முடைய பிரதமர் பாடுபட்டு வருகிறார்.

    சுகாதாரமே நமது செல்வம். சுகாதாரத் துறையை  மேம்படுத்தி அய்யனார் போலவும் மதுரை வீரன் போலவும் பிரதமர் மோடி இந்தியாவை பாதுகாத்து வருகிறார்.  தொற்றுநோய்க்கு எதிராக அனைத்து அரங்குகளிலும் இந்திய பிரதமர் போராட்டம் நடத்தி வருகிறார்  என்று பேசினார்.  அப்போது எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூச்சலிட்டு வந்ததால் அவை நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டது.

    இதையும் படிங்க: சூரப்பாவுக்கு எதிரான விசாரணை ஆணையத்தின் அறிக்கை மீதான தமிழக அரசின் நிலைபாடு என்ன? அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!

    Published by:Murugesh M
    First published:

    Tags: AIADMK, Parliament, PM Narendra Modi

    அடுத்த செய்தி