தமிழகத்தின் முன்னேற்றத்தில் அவரது ஆர்வத்தை நான் பார்த்துள்ளேன் - வசந்தகுமார் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்

தமிழகத்தின் முன்னேற்றம் குறித்த அவரது ஆர்வத்தை நான் எப்போதும் பார்த்துள்ளேன் என்று வசந்தகுமார் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் முன்னேற்றத்தில் அவரது ஆர்வத்தை நான் பார்த்துள்ளேன் - வசந்தகுமார் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்
பிரதமர் மோடி - வசந்தகுமார்
  • Share this:
கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கலை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

கன்னியாகுமரி தொகுதி எம்பி வசந்தகுமார். இவருக்கு வயது 70, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில், கொரோனா பாதிப்பால் நுரையீரலில் தொற்று அதிகாரித்தது. மேலும், நுரையிரலில் சளி அதிகமானதால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. பின்னர் அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பாடார்.




வயது மூப்பு காரணமாகவும், சக்கரை நோய் பாதிப்பு உள்ளிட்ட மற்ற நோய் பிரச்சனை இருந்ததன் காரணமாகவும் நோயின் வீரியம் அதிகரித்து நுரையிரல் செயலிழக்கும் அளவிற்கு சென்றது.இதைத்தொடர்ந்து கடந்த 10 நாட்களுக்கும் மேலாக செயற்கை சுவாச உதவியுடன் சுயநினைவு இழந்த நிலையில் அவருக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டது. இன்று மேலும் அவரது உடலை மேசமடந்து கவலை அளிக்கும் நிலையில் உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் வசந்தகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. வசந்தகுமார் உயிரிழந்ததை தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ள இரங்கலில், மக்களவை நாடாளுமன்ற உறுப்பினர்  எச். வசந்தகுமார் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். வணிக மற்றும் சமூக சேவை முயற்சிகளில் அவரது முன்னேற்றம் குறிப்பிடத்தக்கது. அவருடனான எனது தொடர்புகளின் போது, தமிழகத்தின் முன்னேற்றம் குறித்த அவரது ஆர்வத்தை நான் எப்போதும் பார்த்துள்ளேன். அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்“ என்றுள்ளார்.



அகில இந்திய காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில், “வசந்தகுமார் மறைவால் நாங்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளோம். தீவிரமான காங்கிரஸ்காரான அவர் மக்களுக்கு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர். காங்கிஸ் கட்சிக்கும், தொண்டர்களுக்கு அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாது“ என்றுள்ளார்.
First published: August 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading